அங்கன்வாடி வளாகத்தை சுற்றிலும் பார்த்தீனிய செடிகள்: அச்சத்தில் குழந்தைகள்
அங்கன்வாடி வளாகத்தை சுற்றிலும் பார்த்தீனிய செடிகள்: அச்சத்தில் குழந்தைகள்
UPDATED : டிச 31, 2014 12:00 AM
ADDED : டிச 31, 2014 12:15 PM
வாலாஜாபாத்: கருக்குப்பேட்டை அங்கன்வாடி மைய வளாகத்தை சுற்றிலும், பார்த்தீனிய செடிகள் மண்டி காணப்படுவதால், குழந்தைகள் அச்சத்தில் செல்கின்றனர்.
திம்மயன்பேட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கருக்குப்பேட்டை கிராமத்தில், பத்து ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மையம் உள்ளது. இம்மையத்தில் 22 குழந்தைகள் படித்து வருகின்றனர். இக்கட்டடம், கடந்த 2012-13ம் நிதி ஆண்டு புதுப்பிக்கப்பட்டது. இருப்பினும் கட்டடத்தை சுற்றிலும் பார்த்தீனிய செடிகள் மற்றும் பிற செடிகள் மண்டி உள்ளன.
இதனால், இம்மையத்திற்கு செல்லும் குழந்தைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. செடிகளை அகற்ற, ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தயக்கம் காட்டி வருவதாக அப்பகுதிவாசிகள் தெரிவிக்கின்றனர். எனவே, அங்கன்வாடி மையத்தை சுற்றி உள்ள பார்த்தீனிய செடிகளை அகற்ற, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் எதிர்பார்த்து வருகின்றனர்.
