சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
UPDATED : டிச 31, 2014 12:00 AM
ADDED : டிச 31, 2014 12:19 PM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் பணிக்கு விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளன.
கலெக்டர் ஹரிகரன் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, குஜிலியம்பாறை, கொடைக்கானல், பழநி, வேடசந்தூர் ஒன்றியங்களில் 2 ம் கட்டமாக மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மகளிர் சுயஉதவி குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்புகளுக்கு வங்கி கணக்கு துவங்குதல், இன்சூரன்ஸ் போன்ற பணிகளை மேற்கொள்ள ஒன்றியத்திற்கு 5 சமுதாய வங்கி ஒருங்கிணைப்பாளர்கள் வீதம் 20 பேர் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாதந்தோறும் மதிப்பூதியமாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
தகுதிகள்: பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மலைவாழ் பகுதியில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் இல்லாத நிலையில் 10 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் தகுதியானவராக கருதப்படுவர். ஊராட்சி அளவிலான கூட்டமைப்பில் உறுப்பினராக இருத்தல் வேண்டும். சம்பந்தப்பட்ட பகுதிகளில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். 35 வயதிற்குட்பட்டவராக இருத்தல் வேண்டும்.
கம்ப்யூட்டர் திறன் உடையவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். தகுதியுள்ளவர்கள் வட்டார திட்ட மேலாளர்கள் மூலம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாநில ஊரக வாழ்வாதார இயக்க திட்ட இயக்குனருக்கு விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு 0451-2460050 ல் தொடர்பு கொள்ளலாம், என்றார்.
