மாநில அளவிலான தடகளப் போட்டி; திருப்பூர் வீராங்கனைகளுக்கு பதக்கம்
மாநில அளவிலான தடகளப் போட்டி; திருப்பூர் வீராங்கனைகளுக்கு பதக்கம்
UPDATED : ஜன 01, 2015 12:00 AM
ADDED : ஜன 01, 2015 01:17 PM
திருப்பூர்: மாநில அளவிலான தடகளத்தில், திருப்பூரை சேர்ந்த இருவர், பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்கம் சார்பில் மாநில அளவிலான தடகள போட்டி, ஈரோட்டில் நடந்தது; திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். வயது அடிப்படையில், ஆண்கள், பெண்கள் என தனி தனி பிரிவுகளில் போட்டி நடத்தப்பட்டது.திருப்பூரை சேர்ந்த, 35 வயதுக்கு உட்பட்ட பெண்கள் பிரிவில், காந்திமதி, 100 மீ., ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில், முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
இதேபோல், 30 வயதுக்கு உட்பட்டோர் பெண்கள் பிரிவில், நளினி, 400 மீ., ஓட்டத்தில் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர், 100 மீ., 200 மீ., ஓட்டம், குண்டு எறிதல் ஆகிய போட்டிகளில் இரண்டாமிடம் பிடித்த வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார். இவர்களை, தமிழ்நாடு மாஸ்டர்ஸ் தடகள சங்க மாநில பொறுப்பாளர் ராஜன், செயற்குழு உறுப்பினர் ராஜா, மாவட்ட தலைவர் கென்னடி, செயலாளர் ரவி, பொருளாளர் ஜெரால்டு ஆகியோர் வாழ்த்தினர்.
