தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளிக் கட்டடம் சிதிலம்; மாணவர்கள் அவதி

அரசு பள்ளிக் கட்டடம் சிதிலம்; மாணவர்கள் அவதி

அரசு பள்ளிக் கட்டடம் சிதிலம்; மாணவர்கள் அவதி


UPDATED : ஜன 01, 2015 12:00 AM

ADDED : ஜன 01, 2015 01:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 01, 2015 12:00 AM ADDED : ஜன 01, 2015 01:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள அரசு பள்ளிகளில் மேற்கூரைகள் முழுமையாக சிதிலமடைந்திருப்பதால் மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான துவக்க பள்ளிகளின் மேற்கூரை ஆஸ்பெஸ்டாஸ் சீட்டால் அமைக்கப்பட்டிருந்தது. அரசின் அறிவிப்பிற்கு பின்னர் அனைத்து பள்ளிகளிலும் உள்ள ஆஸ்பெஸ்டாஸ் சீட்கள் அகற்றப்பட்டு ஓடுகளால் மேற்கூரை உருவாக்கப்பட்டது. சில பள்ளிகளில் ஓடுகள் முறையாக பொருத்தப்படாததால் மழைக் காலங்களில் தண்ணீர் ஒழுகி வகுப்பறைகளில் மாணவர்கள் அமர முடியாத நிலையினை ஏற்படுத்தி வருகிறது.

குஜிலியம்பாறை ஒன்றியத்தில் உள்ள கரிக்காலி, சின்னத்தம்பிபட்டி, ஜக்கம்பட்டியில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மழை காலங்களில் சுவர் ஓரமாக ஒதுங்கி நிற்கும் நிலை நீடித்து வருகிறது. மாணவர்களின் நலன் கருதி ஓடுகளை இடைவெளியில்லாமல் மாற்றியமைக்க கல்வித்துறையினர் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us