அதிவேக ரயில்களை இயக்க பயிற்சி வழங்கும் கோரக்பூர் ஐ.ஐ.டி.
அதிவேக ரயில்களை இயக்க பயிற்சி வழங்கும் கோரக்பூர் ஐ.ஐ.டி.
UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 12:17 PM
கோல்கட்டா: நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் வகையில், அதிவேக ரயில்களை இயக்க, மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கான, பயிற்சிகளை ரயில்வே அதிகாரிகளுக்கு, காரக்பூர் ஐ.ஐ.டி., வழங்கி வருகிறது.
பயிற்சி அளிக்கும் குழுவில், இல்லினாய்ஸ் மற்றும் டோக்கியோ பல்கலை அதிகாரிகள், ஐ.ஐ.டி., அதிகாரிகளுடன் இணைந்து, அதிவேக ரயில்கள் இயக்கம் குறித்த பயிற்சிகளை, ரயில்வே அதிகாரிகளுக்கு வழங்கி வருகின்றனர். பயிற்சி பெறும் ரயில்வே அதிகாரிகள் குழுவில், 40 பேர் இடம்பெற்றுள்ளதாக, ஐ.ஐ.டி., ரயில்வே ஆராய்ச்சி மையத்தின் பொறுப்பாளர் சுபக்ரான்சு ராய் தெரிவித்தார்.
தற்போது, மும்பை - அகமதாபாத் வழித்தடத்தில், புல்லட் ரயில் திட்டத்தை அமல்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்து, ஜப்பான் ஆய்வுசெய்து வருகிறது. மேலும், அடுத்தாண்டின் துவக்கத்தில், டில்லி - சென்னை வழித்தடத்தில், புல்லட் ரயில் இயக்கும் திட்ட ஆய்வு பணிகளை சீனா துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
