பராமரிக்காததால் பயன்படுத்த முடியாத பள்ளிக் கழிப்பறைகள்
பராமரிக்காததால் பயன்படுத்த முடியாத பள்ளிக் கழிப்பறைகள்
UPDATED : ஜன 02, 2015 12:00 AM
ADDED : ஜன 02, 2015 12:52 PM
முதுகுளத்தூர்: முதுகுளத்தூரில் 620 மாணவர்களுக்கு மேல் பயிலும் அரசு மேல்நிலைப் பள்ளியில் கழிப்பறை வசதியில்லாததால், அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ், 2013-14 ல், 3 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 6 கழிப்பறைகள் கட்டப்பட்டன. அவற்றை பராமரிக்க பணியாளர்கள் இல்லாததால், கழிப்பறைகளில் துர்நாற்றம் வீசுகிறது.
கழிப்பறைகளில் பயன்படுத்தும் தண்ணீர், செப்டிக் டேங்க் -கிற்கு செல்லாமல் வகுப் பறையை ஒட்டிய காலி இடங்கள், மைதானத்தில் தேங்குகிறது. இதனால் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்படுகின்றனர்.
மாணவர்கள் சிலர் கூறுகையில், "பள்ளியில் அலுவலக உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவு உள்ளிட்ட பணிகளை செய்ய, 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாளர்கள் இல்லை. இதனால் வகுப்பறைகள், பள்ளி வளாகங்களில் தேங்கும் குப்பைகளை, நாங்களே சுத்தம் செய்கிறோம். கழிப்பறைகளில் வீசும் துர் நாற்றத்தால் வகுப்பறைகளில் பாடம் படிக்க முடியவில்லை" என்றனர்.
