UPDATED : ஜன 04, 2015 12:00 AM
ADDED : ஜன 04, 2015 12:16 PM
அ நிறம் | அளவு
சென்னை: தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், சென்னை மாவட்ட அளவிலான கலை போட்டிகள், வரும் 8ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை நடக்கின்றன.
அதில், ஐந்து வயது முதல், 16 வயதிற்கு உட்பட்ட, அனைத்து குழந்தைகளுக்கும், பல கலைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுக்கான, சென்னை மாவட்ட கலைப் போட்டிகள், வரும் 8ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை, தமிழ்நாடு அரசு இசைக் கல்லுாரி வளாகத்தில் உள்ள திறந்தவெளி கலையரங்கில் நடைபெற உள்ளன.
போட்டிகளில் பங்கேற்க விரும்புவோர், 044- 2819 2152 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
