இலவச பயிற்சி வகுப்பில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இலவச பயிற்சி வகுப்பில் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
UPDATED : ஜன 05, 2015 12:00 AM
ADDED : ஜன 05, 2015 11:22 AM
உடுமலை: உடுமலை, கிளை நுாலகம்-1 சார்பில் நடக்கும் திறனாய்வுத் தேர்விற்கான இலவச பயிற்சி வகுப்பில், பள்ளி மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு, ஜனவரி 24ம்தேதி நடக்கிறது. இத்தேர்விற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு கூடுதல் பயிற்சியளிக்கும் வகையில், உடுமலை கிளை நுாலகம்-1ல் இலவச பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது.
பயிற்சியில், பொது அறிவு, அறிவியல், மற்றும் சமூக அறிவியல் உள்ளிட்ட பாடங்கள் நடத்தப்படுகிறது. உடுமலை வருவாய்த்துறை அலுவலர் தினேஷ்ராகவன் பயிற்சியளிக்கிறார். தற்போது இவ்வகுப்பில் மாணவர் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமின்றி, மாணவர்களும் ஆர்வத்துடனும் பயிற்சியில் பங்கேற்கின்றனர்.
நுாற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவியர் பயிற்சியில் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து, விடுமுறை நாட்களில் மாதிரி திறனாய்வு தேர்வு நடத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆர்முள்ள மாணவர்கள் அடுத்தகட்ட பயிற்சியில் பங்கேற்கவும், நுாலகர் வாசகர் வட்டத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
