UPDATED : ஜன 05, 2015 12:00 AM
ADDED : ஜன 05, 2015 11:27 AM
அ நிறம் | அளவு
சென்னை: அஞ்சல் துறை சார்பில், தேசிய அளவிலான கடிதம் எழுதும் போட்டி, சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்தது.
ஒன்றாகச் சேர்ந்து உலக நிலையை உயர்த்துவது எப்படி என்ற தலைப்பிலான, 15 வயதிற்கு உட்பட்டோருக்கான, தேசிய அளவிலான கடிதப் போட்டி, மேற்கு மாம்பலம் அஞ்சுகம் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
அஞ்சல் துறை சார்பில் நடந்த இந்த போட்டியில், சென்னையின் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த, ஏராளமான மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.
இப்போட்டியில், முதல் மூன்று இடங்களை பெறுவோர் பதக்கங்கள் பெறுவதுடன், சர்வதேச அளவிலான கடிதம் எழுதும் போட்டிக்கும் தேர்வு செய்யப்படுவர். போட்டியை, அஞ்சல் துறை முதன்மை கண்காணிப்பாளர் ரங்கநாதன் துவக்கி வைத்தார்.
