காலத்திற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்கள் - மத்திய அரசு நடவடிக்கை
காலத்திற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்கள் - மத்திய அரசு நடவடிக்கை
UPDATED : ஜன 06, 2015 12:00 AM
ADDED : ஜன 06, 2015 02:05 PM
அ நிறம் | அளவு
காந்திகிராமம்: காந்திகிராம பல்கலை துணைவேந்தர் நடராஜன் கூறியதாவது: காலத்திற்கு தகுந்தாற்போல் பாடத்திட்டங்களை மாற்றியமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதுகுறித்து, தென்இந்திய பல்கலை துணைவேந்தர்கள் கூடி ஆலோசித்தோம். தற்போது பல்கலை வடிவமைத்துள்ள பாடத்திட்டத்தில் மாணவர்கள் படிக்க வேண்டியுள்ளது. இதை தவிர்க்க மாணவர்கள் விரும்பியபடி பாடங்களை தேர்வு செய்யும் வகையில் கல்வித்திட்டம் மாற்றியமைக்கப்பட உள்ளது.
மாணவர்களின் ஆளுமை, திறன்மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும். தொடர்பு திறன் இல்லாததால் படித்த இளைஞர்களால் வேலைவாய்ப்பு பெறமுடியவில்லை. கல்வி நிலையங்களில் இருந்து வெளியேறும்போதே தொடர்புதிறனை வளர்த்து கொள்ளும் வகையில் பயிற்சி அளிக்க முடிவு செய்துள்ளோம்.
