தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கட்டடங்கள் இடிவதால் மரத்தடியில் படிக்கும் அவல நிலையில் மாணவர்கள்

கட்டடங்கள் இடிவதால் மரத்தடியில் படிக்கும் அவல நிலையில் மாணவர்கள்

கட்டடங்கள் இடிவதால் மரத்தடியில் படிக்கும் அவல நிலையில் மாணவர்கள்


UPDATED : ஜன 06, 2015 12:00 AM

ADDED : ஜன 06, 2015 02:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 06, 2015 12:00 AM ADDED : ஜன 06, 2015 02:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சாயல்குடி: சாயல்குடி அரசு மேல்நிலைப்பள்ளியில் பழுதடைந்த கட்டடங்கள் இடிந்து விழுந்து வருகிறது. இதனால், மரத்தடியில் மாணவர்கள் அமர்ந்து படிக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

சாயல்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் 1600 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். இங்குள்ள வகுப்பறைகள் 1973 ல் கட்டப்பட்டது. இதில், 10 கட்டடங்கள் தற்போது பழுதடைந்து உள்ளன. அதில் ஒரு கட்டடம் இடிந்துள்ளது. இதனால், மாணவர்கள் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் நிலை உள்ளது. பள்ளி நிர்வாகம் உடனடியாக புதிய கட்டடங்கள் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து தலைமை ஆசிரியர் கூறுகையில், "பழுதடைந்து இடியும் நிலையில் உள்ள கட்டடங்களின் பக்கம் மாணவர்கள் செல்லாமலிருக்க, பழுதடைந்த கட்டடம் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. புதிய கட்டடம் கட்டுவதற்கு பொது பணித்துறை அதிகாரிகள் மதிப்பீடு செய்து இருக்கிறார்கள்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us