UPDATED : ஜன 07, 2015 12:00 AM
ADDED : ஜன 07, 2015 11:12 AM
அ நிறம் | அளவு
மயிலாப்பூர்: பள்ளி அளவிலான கிரிக்கெட் போட்டியில், பாலவித்யா மந்திர் பள்ளி அணி, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பி.எஸ். சீனியர் செகன்டரி பள்ளி சார்பில், பி.சி.சேகர் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி, செயின்ட் பேட்ரிக்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்தது. முதலில் விளையாடிய, பி.எஸ். மெட்ரிக் பள்ளி அணி 20 ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 53 ரன்கள் எடுத்தது.
பின், விளையாடிய, பாலவித்யா மந்திர் பள்ளி அணி, 9.5 ஓவரில், இரண்டு விக்கெட் இழப்பிற்கு, 57 ரன்கள் எடுத்து, எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
