தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/61 மாணவியருக்கு ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணி வாய்ப்பு

61 மாணவியருக்கு ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணி வாய்ப்பு

61 மாணவியருக்கு ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணி வாய்ப்பு


UPDATED : ஜன 07, 2015 12:00 AM

ADDED : ஜன 07, 2015 12:58 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2015 12:00 AM ADDED : ஜன 07, 2015 12:58 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அண்ணா பல்கலை சார்பில், தமிழக பொறியியல் கல்லூரிகளில், இறுதியாண்டு படிக்கும் மாணவியருக்கான, பிரத்யேக வேலைவாய்ப்பு முகாமில், 61 மாணவியர் ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணி வாய்ப்பு பெற்றனர்.

சென்னை அண்ணா பல்கலையின், பல்கலை தொழில் நிறுவன கூட்டமைப்பு மையம் (சி.யு.ஐ.சி.,) சார்பில், பல்கலை கட்டுப்பாட்டில் இயங்கும் பொறியியல் கல்லூரிகளில் படிக்கும், மாணவியருக்கான வேலைவாய்ப்பு முகாம், சென்னை தாளம்பூரில் உள்ள, அக்னி தொழில்நுட்ப கல்லூரியில் நடந்தது.

ஐ.பி.எம்., நிறுவனத்திற்காக, கடந்த இரு தினங்களாக, இம்முகாம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 1,487 மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது; 778 பேர் பங்கேற்றனர். முகாமில், மாணவியரின் பல்வேறு தனித் திறன்கள் சோதிக்கப்பட்டன. இறுதியாக, ஐ.பி.எம்., நிறுவனத்தில் பணியாற்ற, 61 மாணவியர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கான பணியிட ஒதுக்கீடு வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us