தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வறுமையில் பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவ வேண்டுகோள்

வறுமையில் பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவ வேண்டுகோள்

வறுமையில் பின்தங்கிய மாணவர்களுக்கு பள்ளி நிர்வாகம் உதவ வேண்டுகோள்


UPDATED : ஜன 07, 2015 12:00 AM

ADDED : ஜன 07, 2015 01:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 07, 2015 12:00 AM ADDED : ஜன 07, 2015 01:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

உடுமலை: பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களின் உயர்கல்விக்கு, பள்ளி நிர்வாகமே முழுமையாக பொறுப்பேற்று உதவ வேண்டும் என, பயிற்சி ஒருங்கிணைப்பாளரும், உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியருமான துரைசாமி பேசினார்.

ஒவ்வொரு அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும், தலைமையாசிரியர், பெற்றோர் அல்லது சமூக ஆர்வலர், பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் மற்றும் மக்கள் பிரதிநிதி ஒருவர் உட்பட ஐந்து பேர் கொண்ட குழு, பள்ளி மேலாண்மைக் குழுவாக செயல்படுகிறது.

இக்குழுவில், உறுப்பினர்களுக்கு, பள்ளி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சி, மாணவர்களுக்கான உரிமை மற்றும் சட்டங்கள் குறித்து அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கத்தின் சார்பில் பயிற்சி வகுப்பு நடத்தப்படுகிறது. இதன் அடிப்படையில், அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், மடத்துக்குளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களுக்கான அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு உடுமலை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.

பாப்பான்குளம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவிக்குமார், குப்பம்பாளையம் அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் சிலம்பசெல்வி மற்றும் சோழமாதேவி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிறிஸ்டினல் ஜாய் உள்ளிட்டோர் பயிற்சியளித்தனர்.

பயிற்சி ஒருங்கிணைப்பாளர் துரைசாமி கூறியதாவது: அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் பெரும்பான்மையானவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தைச்சேர்ந்தவர்கள். இம்மாணவர்களுக்கு பள்ளிக் கல்விக்கு மட்டுமின்றி, அவர்களின் உயர்கல்விக்கும் பள்ளி நிர்வாகத்தினர் பொறுப்பேற்று உதவ வேண்டும். மாணவர்களுக்கு தேவைப்படும் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை வழங்கி, அவற்றை பூர்த்தி செய்வதற்கு முழுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது, பல்வேறு பள்ளிகளில், பொருளாதார வசதியில்லாத மாணவர்களை, முன்னாள் மாணவர் சங்க உறுப்பினர்கள் தத்தெடுத்து, அம்மாணவர்கள் கல்வி கற்பதற்கு போதிய ஏற்பாடுகளை செய்கின்றனர். அனைத்து அரசு பள்ளி நிர்வாகத்தினரும் இத்திட்டத்தை தங்கள் பள்ளிகளிலும் செயல்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.

மாணவர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கும், பள்ளியின் கட்டமைப்புகளை சரிசெய்வதில் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களை கல்வித்தரத்தில் முன்னோக்கி அழைத்து செல்வதில் ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தினர் முழுமையாக செயல்பட வேண்டும். இவ்வாறு கூறினார்.

உடுமலை ஒன்றியத்திலுள்ள, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கு ராஜேந்திராரோடு அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிற்சி வகுப்பு நடந்தது. கல்லாபுரம், அமராவதி நகர் மற்றும் திருமூர்த்திநகர் பள்ளி தலைமையாசிரியர்கள் பயிற்சியளித்தனர். ராஜேந்திரா ரோடு அரசு பள்ளி தலைமையாசிரியர் முத்துக்குமார், பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

தொடர்ந்து, பள்ளியின் உள்கட்டமைப்பு வசதி மற்றும் பள்ளியிலுள்ள கல்வி சார்ந்த பிரச்னைகள், அதற்கான செயல்பாடு மற்றும் தீர்வு, மேம்பாட்டு பணிகள், மாணவர்களின் வருகை உட்பட பல்வேறு விபரங்களை உள்ளடக்கிய படிவம் அனைத்து உறுப்பினர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. இதனை, பூர்த்தி செய்து, நாளை (8 ம் தேதி) நடக்கும் இரண்டாம் கட்ட பயிற்சியின்போது ஒப்படைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. உடுமலை,மடத்துகுளம் மற்றும் குடிமங்கலம் ஒன்றியங்களிலுள்ள 29 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த 87 உறுப்பினர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us