தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலில் ஒருவர் கொலை

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலில் ஒருவர் கொலை

இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்களிடையேயான மோதலில் ஒருவர் கொலை


UPDATED : ஜன 08, 2015 12:00 AM

ADDED : ஜன 08, 2015 12:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 08, 2015 12:00 AM ADDED : ஜன 08, 2015 12:28 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை, இன்ஜினியரிங் கல்லூரியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட கோஷ்டி மோதலில், காயமடைந்த மாணவர், நேற்று பலியானார். இது தொடர்பாக, மாணவர்கள் ஆறு பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கோவை, பொள்ளாச்சி ரோடு, ஈச்சனாரியில் கற்பகம் பல்கலை செயல்பட்டு வருகிறது. இதற்கு உட்பட்ட இன்ஜினியரிங் கல்லூரியில், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம், ஆர்.புதுப்பட்டி, பெரியமுனியப்பன் கோவில் வீதியை சேர்ந்த லாரி டிரைவர் பாலுசாமி மகன் கார்த்திகேயன், 21, பி.இ., மெக்கானிக்கல் இன்ஜினியரிங் இறுதியாண்டு படித்தார்; கல்லூரி விடுதியில் தங்கி இருந்தார்.

கார்த்திகேயனும், அதே கல்லூரியில் இறுதியாண்டு படிக்கும், நண்பர்களும், கடந்த 5ம் தேதி மதியம், ஓட்டல் முன் நின்றிருந்தனர். அப்போது, அதே கல்லூரியில் படிக்கும் சத்யநாராயணன், 21, உடன் தகராறு ஏற்பட்டது. இருவரும் அடித்துக் கொண்டனர். இந்த முன்விரோதத்தால், அன்று இரவில், சத்யநாராயணன், தனது நண்பர்களுடன் சென்று கார்த்திகேயனை உருட்டுக்கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கினார்.

தலையில் பலத்த காயமடைந்த கார்த்திகேயன், தனியார் மருத்துவனையில் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். அவரது உடல், அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிர்ச்சியுற்ற நூற்றுக்கணக்கான மாணவர்கள், அரசு மருத்துவமனையில் திரண்டனர். சடலத்தை பார்த்த, கார்த்திகேயனின் பெற்றோர், கண்ணீர் விட்டு கதறியது, நெஞ்சை உருக்குவதாக இருந்தது.

சம்பவம் தொடர்பாக, மதுக்கரை போலீசார் விசாரித்து, அதே கல்லூரியில் படிக்கும், தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த சிவப்பிரகாஷ், 23, ( பி.இ., சிவில்), மதுரை பெத்தானியாபுரம் சத்யநாராயணன், 21, ( பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ்), மதுரை சோழவந்தான் நவீன்குமார், 21, (பி.இ., மெக்கானிக்கல்), மதுரை வடக்குமாசி வீதி அரவிந்த் கண்ணன், 21, (பி.இ., ஏரோநாடிக்கல்), சென்னை மந்தைவெளி மெர்வின்,2 1 ( சிவில்) கிருஷ்ணகிரி, குருவபட்டி வினோத், 21, ஆகியோரை கைது செய்தனர். இவர்கள் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சடலத்தை வாங்க மறுப்பு:

பிரேத பரிசோதனைக்கு பிறகு, சடலத்தை வாங்க மறுத்து, பெற்றோரும், மாணவர்களும் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அவர்களிடம், போலீஸ் அதிகாரிகளும், கல்லூரி நிர்வாகத்தினரும் சமரச பேச்சு நடத்தினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us