தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை துவக்கம்

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை துவக்கம்

காணாமல் போன குழந்தைகளைக் கண்டுபிடிக்க சிறப்பு நடவடிக்கை துவக்கம்


UPDATED : ஜன 09, 2015 12:00 AM

ADDED : ஜன 09, 2015 11:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2015 12:00 AM ADDED : ஜன 09, 2015 11:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

குழந்தைகள் காப்பகங்களை ஆய்வுசெய்ய போலீசாருக்கு எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். தமிழகம் முழுவதும், வீட்டை விட்டு சிறுவர், சிறுமியர் வெளியேறுவது அன்றாட நிகழ்வாக மாறி வருகிறது. இதுதவிர, திருவிழாக்களில் பெற்றோரிடம் இருந்து தவறுதலாக குழந்தைகள் பிரிய நேரிடும் சம்பவங்களும் நிகழ்கின்றன.

இதுபோன்ற காரணங்களால் பாதுகாப்பற்ற நிலையில் உள்ள குழந்தைகள், பேருந்து, ரயில் நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றி திரிவதும்; அங்கீகரிக்கப்படாத காப்பகங்களில் வசிக்க வாய்ப்புள்ளதாகவும் குற்றப் புலனாய்வு போலீசார் கருதுகின்றனர்.

இத்தகைய குழந்தைகள், பல்வேறு சமூக விரோத செயல்களால் பாதிக்கப்படும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவிக்கின்றனர். அத்தகைய குழந்தைகளை கண்டுபிடிக்கவும், கடந்த 10 ஆண்டுகளில் பெற்றோரை பிரிந்த குழந்தைகளை, ஆபரேஷன் ஸ்மைல் என்ற செயல்பாடு மூலம் மீட்கவும், அவர்களை பாதுகாக்கவும் தமிழ்நாடு குற்றப் புலனாய்வு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், கடந்த 10 ஆண்டுகளில் காணாமல் போன மற்றும் இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகள் பற்றிய விவரங்களை சேகரிக்க, அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களுக்கும், தமிழ்நாடு குற்றப் புலனாய்வு இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, ஆப்பரேஷன் ஸ்மைல் நேற்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் துவங்கப்பட்டுள்ளது. ஆப்பரேஷன் ஸ்மைல் குறித்து, மாவட்ட போலீசாருடன், காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆலோசனை நடத்தினார்.

கலெக்டர் அலுவலக சமுதாய கூடத்தில் நடந்த கூட்டத்தில் விஜயகுமார் பேசியதாவது: மாவட்ட காவல் நிலையங்களில், இதுவரை கண்டுபிடிக்கப்படாத குழந்தைகள் பற்றிய விவரங்களை, நாம் சேகரிக்க உள்ளோம். சிறுவர்களுக்கான விவரங்கள் தயாரிக்க, ஒவ்வொரு காவல் நிலையத்திற்கும் விண்ணப்பங்கள் கொடுக்கப்படும். இதில், காணாமல் போன, சிறுவர்கள் பற்றிய விவரங்களை, புகைப்படத்துடன் தெரிவிக்க வேண்டும்.

இந்த தகவல் மூலம், மற்ற மாவட்டங்களில் சுற்றித் திரியும் சிறுவர்களையோ அல்லது குழந்தைகள் காப்பகத்தில் உள்ள சிறுவர்களையோ குற்றப் புலனாய்வு போலீசார் கண்டுபிடிக்க முடியும். அதேபோல், நம் மாவட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் குழந்தைகள் காப்பகங்களை, நாம் ஆய்வு செய்ய வேண்டும்.

காவல் நிலையங்கள், தங்கள் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், நாள்தோறும் ஆய்வு மேற்கொண்டு, பாதுகாப்பற்ற சிறுவர்களை கண்டறிய வேண்டும். அவர்கள் மற்ற மாவட்டங்களைச் சேர்ந்த சிறுவர்களாக இருக்க கூடும். குழந்தைகள் காப்பகம் தொடர்பான உதவிக்கு, மாவட்ட சமூக நல அலுவலகம், போலீசாருடன் இணைந்து பணியாற்றும். இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us