தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கோவை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

கோவை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்!

கோவை கல்லூரிகளில் பொங்கல் விழா கொண்டாட்டம்!


UPDATED : ஜன 09, 2015 12:00 AM

ADDED : ஜன 09, 2015 11:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 09, 2015 12:00 AM ADDED : ஜன 09, 2015 11:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவை அரசு கலைக் கல்லுாரி மற்றும் கோவை தொழில்நுட்பக் கல்லுாரியில், தமிழ் பாரம்பரிய பெருமையுடன், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

கோவை அரசு கலை கல்லுாரியில், முத்தமிழ் மன்றம் சார்பில், அருட்பொங்கலும் அறிவு பொங்கலும் பெருகட்டும் உலகெங்கும் என்ற தலைப்பில், கல்லுாரி முதல்வர் குமரேசன் தலைமையில் நேற்று பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தமிழ்த்துறை மற்றும் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பாரம்பரிய உடைகள் அணிந்து, புதுபானை வைத்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியின் முக்கிய பகுதியாக, உழவு தொழில் சிறப்பு, உழவர்களின் சிறப்பு, விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயிகளின் அவலநிலை குறித்து மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்ட்டது.

இந்நிகழ்ச்சியில், சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாஞ்சில் நாடன், தமிழ்த்துறை தலைவர் அரங்கநாதன், உதவி பேராசிரியர் நாகரத்தினம், என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

* கோவை தொழில்நுட்பக் கல்லுாரியில் நேற்று நடந்த முத்தமிழ் விழாவின் நிறைவாக மாணவர்கள், பொங்கல் வைத்து சப்த கன்னிகளுக்கு படைத்தனர். கோவை தொழில்நுட்பக் கல்லுாரியின் முத்தமிழ் மன்றம் சார்பில், முத்தமிழ் விழா -15 கடந்த 3ம் தேதி துவங்கியது; நேற்று நிறைவடைந்தது. விழாவில், பட்டிமன்றம், கிராமிய மணம் வீசும் நடனங்கள், முத்தமிழ் விருது, இசை மற்றும் நடன நிகழ்ச்சிகள் என நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

நிறைவு நாளான நேற்று மாலை, கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்களுடன் இணைந்து பொங்கல் விழா கொண்டாடினர். கரும்பு, வாழை, மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் வைத்து மாணவர்கள் சூரிய பொங்கல் வைத்தனர். தொடர்ந்து, சப்த கன்னிகளுக்கு படைத்த மாணவர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட, 100க்கும் மேற்பட்டோருக்கு பரிமாறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us