டென்னிஸ் போட்டியில் உஸ்மானியா பல்கலை அணி சாம்பியன்
டென்னிஸ் போட்டியில் உஸ்மானியா பல்கலை அணி சாம்பியன்
UPDATED : ஜன 09, 2015 12:00 AM
ADDED : ஜன 09, 2015 12:34 PM
அ நிறம் | அளவு
பூந்தமல்லி: தென்மண்டல அளவிலான மகளிர் டென்னிஸ் போட்டியில், உஸ்மானியா பல்கலை அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.
சவீதா பல்கலைக் கழகம் சார்பில், தென்மண்டல அளவிலான பல்கலைக்கழகங்களுக்கு இடையே, மகளிர் டென்னிஸ் போட்டி, அதன் பல்கலை வளாகத்தில் நடந்தது. அதன் இறுதி போட்டியில், உஸ்மானியா பல்கலை அணி 2-0 என்ற செட் கணக்கில், எஸ்.ஆர்.எம்., பல்கலை அணியை வென்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
மூன்றாவது இடத்திற்கான போட்டியில், ஜெயின் பல்கலை அணி 2-1 என்ற செட் கணக்கில், அண்ணா பல்கலை அணியை தோற்கடித்தது.
