தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்

பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மனித சங்கிலி போராட்டம்


UPDATED : ஜன 10, 2015 12:00 AM

ADDED : ஜன 10, 2015 07:11 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 10, 2015 12:00 AM ADDED : ஜன 10, 2015 07:11 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து, அறக்கட்டளை நிர்வாகத்தை அரசே ஏற்று நடத்தக் கோரி, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமாக, சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உட்பட பல பகுதிகளில் கல்வி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. எனவே, இந்த அறக்கட்டளை தொடர்பாக, அவ்வப்போது பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.

சமீபத்தில், கல்லூரிகளில் பேராசிரியர்கள் நியமனம் தொடர்பாகவும், கடலூரில் உள்ள கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி பேராசிரியர் மாற்றப்பட்டது; அந்த பேராசிரியைக்கு ஆதரவாக செயல்பட்ட, பச்சையப்பன் கல்லூரி பேராசிரியர் மீதான நடவடிக்கை போன்றவை, அறக்கட்டளைக்கு எதிராக திரும்பி உள்ளன. அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளின் பேராசிரியர்கள் மட்டுமின்றி, மாணவர்களும் இணைந்து, போராட்டத்தில் குதித்து உள்ளனர். இவர்கள், அறக்கட்டளையை அரசே ஏற்று நடத்த வேண்டும்; முறைகேடுகளை களைய வேண்டும் என, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் போன்றவற்றை நடத்தினர்.

அப்போது, அறக்கட்டளை செயலராக இருந்த ராஜகோபாலன், மாணவர்கள், ஆசிரியர்கள் பிரச்னைகளை தீர்க்க பேச்சுவார்த்தை நடத்துவதாக, அறிவித்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.

இந்நிலையில், அறக்கட்டளை நிர்வாகம் நேற்று முன்தினம் இரவு, செயலர் ராஜகோபாலனை நீக்கி விட்டு, ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி பாஸ்கர் என்பவரை, புதிய செயலராக நியமித்துள்ளது. தொடர்ந்து, நேற்று காலை, சென்னை பச்சையப்பன் கல்லூரியில், பேராசிரியர்களுக்கு ஆதரவாக மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து, மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், பேராசிரியர்கள், 100 பேர் மற்றும் 600க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். காலை 10:00 மணிமுதல், 11:00 மணிவரை போராட்டம் நடந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us