தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் சாதனையாளராக முடியும்"

"கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் சாதனையாளராக முடியும்"

"கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டால் சாதனையாளராக முடியும்"


UPDATED : ஜன 11, 2015 12:00 AM

ADDED : ஜன 11, 2015 01:02 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 11, 2015 12:00 AM ADDED : ஜன 11, 2015 01:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: "கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் பயன்படுத்திக் கொண்டால், சாதனையாளராக முடியும்" என, பள்ளி பொன் விழாவில் துணை கமிஷனர் சுந்தரவடிவேலு பேசினார்.

திருப்பூர் காங்கயம் ரோடு, செயின்ட் ஜோசப் மெட்ரிக் பள்ளி 50வது ஆண்டு பொன் விழா நடைபெற்றது. விழாவில், போலீஸ் துணை கமிஷனர் சுந்தரவடிவேலு பேசியதாவது: இன்றைய காலகட்டத்தில் எந்த பள்ளியை தேர்வு செய்வது, குழந்தையை எந்த கல்விமுறையை படிக்க வைப்பது என்ற குழப்பம், பெற்றோர்களுக்கு ஏற்படுகிறது. கிடைக்கும் வாய்ப்பை சரியான முறையில், சரியான நேரத்தில் பயன்படுத்திக்கொண்டால், சாதனையாளராக முடியும்.

எல்லா துறைகளிலும் சாதனை செய்வதற்கான வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. இதற்காக, ஒரே பாதையில் செல்லவேண்டிய அவசியமில்லை. ஒவ்வொரு துறையிலும் வாய்ப்புகள் நிறைய இருக்கிறது. சாதனையாளராக மாற, ஒவ்வொருவரும் தங்களை தயார் செய்துகொள்ள வேண்டும். பிறரது கஷ்டத்தை பார்த்து, பரிதாபப்படும் மனநிலையே பலருக்கும் இருக்கிறது.

அவர்களுக்கு உதவும் மனப்பான்மை சிலருக்கு மட்டுமே வருகிறது. அவ்வாறு உதவும் மனம் கொண்டவர்களே, சாதனையாளர்களாக விளங்குகின்றனர். கல்வி என்பது படிப்பு, வேலை சார்ந்ததாக மட்டுமின்றி, வாழ்க்கையின் சகல விஷயங்களையும் மாணவர்களிடம் கொண்டு சேர்க்கும் ஒட்டுமொத்த கல்வியாக இருக்க வேண்டும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us