பழுதடைந்த சத்துணவு சமையல் கூடத்தை சீரமைக்க நடவடிக்கை
பழுதடைந்த சத்துணவு சமையல் கூடத்தை சீரமைக்க நடவடிக்கை
UPDATED : ஜன 13, 2015 12:00 AM
ADDED : ஜன 13, 2015 11:18 AM
அ நிறம் | அளவு
அவலூர்பேட்டை: மேல்செவலாம்பாடி குப்பத்தில் பழுதடைந்த சத்துணவு சமையல் கூடம் சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேல்மலையனூர் ஒன்றியம் மேல்செவலாம்பாடி-குப்பம் துவக்கப் பள்ளியில் 40 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இங்கு 20 ஆண்டுகளாக இருந்த சத்துணவு கூடம் தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது.
இந்த கட்டடம் தரைமட்டத்தோடு சமமான நிலையில் உள்ளதால், மழைநீர் சத்துணவு கூடத்திற்குள்ளே சென்று தேங்குகிறது. சமையல் அறை மற்றும் ஸ்டாக் ரூம் ஒன்றாக உள்ளது. இதனால் அடுப்பு புகை அதிகரிக்கிறது.
எனவே பழுதடைந்த கட்டடத்தை அப்புறப்படுத்தி, புதிதாக சத்துணவு கூடம் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
