தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்

மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்ற மாணவர்கள்


UPDATED : ஜன 13, 2015 12:00 AM

ADDED : ஜன 13, 2015 11:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2015 12:00 AM ADDED : ஜன 13, 2015 11:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவிலான சைக்கிள் போட்டியில் மாணவ, மாணவியர் அசத்தலான பங்கேற்றனர்.

சரவணம்பட்டி அருகே உள்ள ஸ்ரீகுரு தொழில்நுட்ப கல்லுாரி சார்பில் மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவியருக்கான சைக்கிள் போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. மாணவர் 16, 18 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் மாணவியர் 16, 18 வயதுக்குட்பட்ட மற்றும் 18 வயதுக்கு மேற்பட்ட பிரிவிலும் முறையே 10 கிமீ., 8 கி.மீ., 5 கி.மீ., 3 கி.மீ.,துார போட்டியில் பங்கேற்றனர்.

ஒவ்வொரு பிரிவிலும் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்கள் விவரம்:

மாணவர் பிரிவு

16 வயது - இமாகுலேட் பள்ளி ஆஸ்லே கில்பர்ட், ஆஸ்ரம் பள்ளி அஸ்வின், சவுத் இந்தியா பேப்டிஸ்ட் பள்ளி ஜோசுவா ஆகியோர்.

18 வயது பிரிவு- சோகைப் அக்தர், ஆஸ்ரம் பள்ளி அஸ்வின், எஸ்.எஸ்.வி.,பள்ளி ஹர்சத்ராம்.

18 வயதுக்கு மேல் - கோவை தொழில்நுட்ப கல்லுாரி கேசவ்மூர்த்தி, கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி சரத் சந்தர், ஸ்ரீகுரு தொழில்நுட்ப கல்லுாரி தமிழ்செல்வன்.

ஆண்கள் பிரிவில் கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லுாரி சரத்சந்தர், கோவை தொழில்நுட்ப கல்லுாரி கேசவ்மூர்த்தி, கோவை அரசு கல்லுாரி கதிர்வேல்.

18 வயது பிரிவில், எஸ்.எஸ்.வி.,பள்ளி ஹர்சத்ராம், மதன், நாராயணகுரு பாலிடெக்னிக் கல்லுாரி அஜய் ஆகியோர்.

* மாணவியர் பிரிவு

16 வயது - செயின்ட் மேரீஸ் பள்ளி தமிழ்ஸ்ரீ, வாஷினி, கலாநந்தினி ஆகியோர்.

18 வயது - சுவாமி விவேகானந்தா பள்ளி தாரணி, செயின்ட் மேரீஸ் பள்ளி ஸ்ரீநிவேதா, தமிழ்ஸ்ரீ. 18 வயதுக்கு மேல்-பாரதியார் பல்கலை மணிஷா, சுவாமி விவேகானந்தா பள்ளி தாரணி, பண்ணாரிஅம்மன் இன்ஜி.,கல்லுாரி காயத்ரி ஆகியோர்.

சக்தி சுகர்ஸ் நிறுவன சேர்மன் மாணிக்கம் பரிசளித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us