தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு

சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு

சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வுக்கு பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு


UPDATED : ஜன 13, 2015 12:00 AM

ADDED : ஜன 13, 2015 12:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 13, 2015 12:00 AM ADDED : ஜன 13, 2015 12:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: பாட்கோ சார்பில், சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வுக்கு, பயிற்சி பெறுவதற்கான நுழைவுத் தேர்வு நடந்தது.

ஐ.ஏ.எஸ்., உள்ளிட்ட பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதனிலை தேர்வு எழுத ஆர்வமுள்ள, இளங்கலை மற்றும் முதுநிலை பட்ட மேற்படிப்பு முடித்த ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு, ஆதிதிராவிட மேம்பாட்டு வரைநிலை கழகம் (பாட்கோ) சார்பில் தகுதித் தேர்வு நடத்தி, பயிற்சி அளிக்கப்படுகிறது.

நடப்பு 2014-15ம் கல்வி ஆண்டிற்கான பயிற்சி வகுப்பில் பங்கேற்பதற்கான, மாணவர்களை தேர்வு செய்யும் நுழைவுத் தேர்வு அறிவிக்கப்பட்டது. இப்பயிற்சி வகுப்பில் சேர, 144 ஆண்கள், 64 பெண்கள் என மொத்தம் 208 பேர் விண்ணப்பித்தனர். நெல்லித்தோப்பு மணிமேகலை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த நுழைவுத் தேர்வில், 118 ஆண்கள், 54 பெண்கள் என 172 பேர் பங்கேற்று, தேர்வு எழுதினர்.

தேர்வை, அமைச்சர் ராஜவேலு, பாட்கோ சேர்மன் பிரசாந்த்குமார், மேலாண் இயக்குநர் உத்தமன் ஆகியோர் பார்வையிட்டனர். விடைத்தாள் திருத்தும் பணி, மேலாண் இயக்குநர் உத்தமன் மேற்பார்வையில் நடந்தது. இதில், தகுதி அடிப்படையில் அதிக மதிப்பெண் எடுத்த 60 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு முடிவுகளை, பாட்கோ தலைவர் பிரசாந்த்குமார் வெளியிட்டார்.

நுழைவு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 10 மாணவர்களை, சென்னை மனிதநேய அறக்கட்டளை நடத்தும் பயிற்சி மையத்திற்கு அனுப்பி, அங்கேயே தங்கி பயிற்சி பெறவும், மற்ற 50 பேருக்கு பாட்கோ அம்பேத்கர் அறிவு மற்றும் விழிப்புணர்வு மையம் மூலம் சைதை துரைசாமி மனித நேய ஐ.ஏ.எஸ்., அகாடமி வல்லுனர்கள் மூலம் பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us