தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தேசிய அளவிலான கூடைபந்து லீக் போட்டி - பாரதியார், சத்யபாமா பல்கலை அணிகள் வெற்றி

தேசிய அளவிலான கூடைபந்து லீக் போட்டி - பாரதியார், சத்யபாமா பல்கலை அணிகள் வெற்றி

தேசிய அளவிலான கூடைபந்து லீக் போட்டி - பாரதியார், சத்யபாமா பல்கலை அணிகள் வெற்றி


UPDATED : ஜன 14, 2015 12:00 AM

ADDED : ஜன 14, 2015 11:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 14, 2015 12:00 AM ADDED : ஜன 14, 2015 11:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சோழிங்கநல்லுார்: அகில இந்திய அளவிலான கூடைபந்து லீக் போட்டியில், பாரதியார் பல்கலை, சத்யபாமா பல்கலை அணிகள் வெற்றி பெற்றன.

சத்யபாமா பல்கலைக்கழகம் சார்பில், அகில இந்திய அளவிலான, பல்கலை அணிகளுக்கு இடையே, ஆண்கள் கூடைபந்து போட்டி, சோழிங்கநல்லுாரில் நடந்து வருகிறது. அதில், நான்கு மண்டல அணிகள் பங்கேற்று உள்ளன. ஒரு மண்டலத்திற்கு நான்கு அணிகள் என, நான்கு மண்டத்திலும் இருந்து, 16 பல்கலைக்கழக அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

லீக் சுற்று போட்டிகளில், பாரதியார் பல்கலை (கோவை) அணி, 88-76 என்ற புள்ளிக்கணக்கில், பாரதி வித்யா பல்கலை (புனே) அணியை தோற்கடித்தது. டெல்லி பல்கலை அணி, 79-57 என்ற புள்ளிக்கணக்கில், சிவாஜி பல்கலை (கோலாப்பூர்) அணியை வெற்றி பெற்றது. எஸ்.பி.எம்., பல்கலை (பெங்களூரு) அணி, 96-65 என்ற புள்ளிக்கணக்கில், ராஜஸ்தான் பல்கலை (ஜெய்பூர்) அணியை வீழ்த்தியது.

சத்யபாமா பல்கலை (சென்னை) அணி, 111-67 என்ற புள்ளிக்கணக்கில், சிவாஜி பல்கலை (கோலாப்பூர்) அணியை வென்றது. பஞ்சாப் பல்கலை (சண்டிகார்) அணி, 82-68 என்ற புள்ளிக்கணக்கில், ராஜஸ்தான் பல்கலை ( ஜெய்பூர்) அணியை தோற்கடித்தது. அதில், நாளை மறுதினம் காலிறுதி போட்டியும், 18ம் தேதி அரையிறுதி போட்டியும் நடக்கின்றன. 19ம் தேதி மூன்றாவது இடத்திற்கான போட்டியும், இறுதி போட்டியும் நடக்க உள்ளன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us