தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தள்ளாத வயதிலும் விளையாட்டில் சாதிக்கும் தளரா குணம் உடைய முதியவர்!

தள்ளாத வயதிலும் விளையாட்டில் சாதிக்கும் தளரா குணம் உடைய முதியவர்!

தள்ளாத வயதிலும் விளையாட்டில் சாதிக்கும் தளரா குணம் உடைய முதியவர்!


UPDATED : ஜன 16, 2015 12:00 AM

ADDED : ஜன 16, 2015 02:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 16, 2015 12:00 AM ADDED : ஜன 16, 2015 02:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: சாதிக்க துணிந்து விட்டால் போதும் வயதும், உடல் நிலையும் ஒரு பொருட்டே இல்லை என வாழ்க்கையில் அடுக்கடுக்கான தடைகளை தகர்த்தெறிந்து மூத்தோர் தடகளப் போட்டிகளில் உச்சம் தொட்டு சாதித்து வருகிறார் மதுரையை சேர்ந்த 85 வயது வீரர் ராதாகிருஷ்ணன்.

பெரும்பாலும் வயது 60ஐ எட்டினாலே டீக்கடைகளில், அன்றாட அரசியல் கதையை பேசி விட்டு வீட்டிற்கு சென்று பேரன் பேத்தியை கொஞ்சி காலம் கழித்து, அமைதியான வாழ்க்கையை விரும்புவோர்தான் அதிகம். ஆனால் அவர்களில் இருந்து வேறுபட்டு 80ஐ தாண்டியும் ஓய்வை ஓரங்கட்டி விட்டு, 1999 முதல் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் நடக்கும் மூத்தோர் தடகள போட்டிகளில் பங்கேற்று, 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள், சுழற்கேடயங்கள், சான்றிதழ்களை அள்ளி வருகிறார் இவர்.

தடகள சாதனைகள் குறித்து அவர் கூறியதாவது: பலசரக்கு கடை நடத்தினேன். 27 ஆண்டுக்கு முன் சர்க்கரை நோயும் என்னை தொற்றிக் கொண்டது. அதை கட்டுப்படுத்த டாக்டர் ஆலோசனைப்படி நடைப் பயிற்சியில் தீவிரம் காட்டினேன். மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில்தான் பயிற்சி. என் பயிற்சியை நீண்ட நாட்களாக கண்காணித்த டாக்டர் ஒருவர் மூத்தோர் தடகளப் போட்டிகளில் பங்கேற்க அறிவுறுத்தினார்.

அதுமுதல் 1999ல் திருச்சியில் நடந்த 5 கி.மீ., நடை, 100 மீ., 200 மீ., போட்டிகளில் முதலில் பங்கேற்றேன். தோல்வி தான் மிஞ்சியது. மனம் தளரவில்லை. அதன்பின் கோவையில் நடந்த தேசிய போட்டிகளில் பங்கேற்று முதலாவதாக வந்தேன். அன்றிலிருந்து சென்னை, சண்டிகார், பெங்களூரு என மூத்தோர் தடகள போட்டிகளில் பங்கேற்று வருகிறேன். இதனால் ஆரம்ப காலத்தில் 350 மில்லி கிராமாக இருந்த சர்க்கரை அளவு தற்போது 150 ஆக குறைந்து என் கட்டுக்குள் வந்துள்ளது.

மனிதர்களுக்கு உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி மிக முக்கியம். 40ஐ தாண்டிவிட்டால் உணவு கட்டுப்பாடுக்குள் வந்து விட வேண்டும். ஓட்டத்திலேயே என் வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்த நேரம் 2013ல் திடீரென வீட்டில் வழுக்கி விழுந்து என் தொடை எலும்பு முறிந்து விட்டது. ஆப்பரேஷன் செய்து அங்கு பிளேட் வைக்கப்பட்டது.

இனிமேல் நமக்கு நாற்காலி மட்டும் தான் நினைத்தபோது எனக்குள் இருந்த வைராக்கியம் இன்னும் நீ சாதிப்பாய்... என்றது. அதன்பின் தடகளத்தில் ஓட்டப் போட்டிகளை தவிர்த்து ஈட்டி எறிதல், குண்டு ஏறிதல், வட்டு எறிதலில் தேர்ச்சி பெற்று 2013 முதல் என் விளையாட்டு மாறியது.

இன்னும்... இன்னும்... சாதிக்க என் மனம் துடிக்கிறது. வயது அதற்கு ஒத்துழைக்கும் வரை என் சாதனை பயணத்தை தொடர்வேன். இளம் வயதில் இருந்தே குழந்தைகளை நடைப் பயிற்சி, உடற்பயிற்சி செய்ய பழக்க வேண்டும். அப்படி இருக்கும் பட்சத்தில் சர்க்கரை நோய் பாதிப்பு உள்ளோர் வாரிசுகளுக்கு அந்நோயை வராமல் தடுக்கலாம் அல்லது வந்த பின் கட்டுக்குள் வைக்க முடியும் என்கிறார் இந்த இளைய வீரர். இவரை 98945 02279ல் வாழ்த்தலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us