தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாநில கேரம் போட்டியில் ஊராட்சிப் பள்ளி மாணவியர் 2ம் இடம் பிடித்து சாதனை!

மாநில கேரம் போட்டியில் ஊராட்சிப் பள்ளி மாணவியர் 2ம் இடம் பிடித்து சாதனை!

மாநில கேரம் போட்டியில் ஊராட்சிப் பள்ளி மாணவியர் 2ம் இடம் பிடித்து சாதனை!


UPDATED : ஜன 19, 2015 12:00 AM

ADDED : ஜன 19, 2015 12:01 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 19, 2015 12:00 AM ADDED : ஜன 19, 2015 12:01 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஊட்டி: மாநில அளவில் நடந்த கேரம் போட்டியில், ஊராட்சிப் பள்ளி மாணவியர், இரண்டாம் இடம் பிடித்து சாதனை புரிந்தனர்.

மாநில அரசின் விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், பள்ளி மாணவ, மாணவியரின் விளையாட்டு திறமையை ஊக்குவிக்க பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, மாவட்ட அளவில், கேரம் போட்டிகள் நடத்தப்பட்டன.

இதில் தொடக்க, நடுநிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் அளவில் போட்டிகள் நடத்தப்பட்டன. கடந்த செப்டம்பர் மாதம் மாவட்ட அளவில் நடந்த கேரம் போட்டியில், முதலிடம் பிடித்த மாணவர்கள், மாநில போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை பெற்றனர்.

இதில், ஜூனியர் தனி நபர் பிரிவில் பிரிவில், கோத்தகிரி அவ்வூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவன் ஜோதீஷ்( 5ம் வகுப்பு), சிந்து (4ம் வகுப்பு), இரட்டையர் பிரிவில் பிரியதர்ஷினி (3ம் வகுப்பு) ஆகியோர் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று, கடந்த வாரம் திருச்சியில் நடந்த, மாநில அளவிலான போட்டியில் பங்கு பெற்றனர். இதில், இரட்டையர் பிரிவில், பிரியதர்ஷினி மற்றும் மணிமாலா ஜோடி, இரண்டாம் இடம் பிடித்து, நீலகிரி மாவட்ட கல்வி துறைக்கு பெருமை தேடி தந்துள்ளனர்.

மாநில அளவில் நடந்த கேரம் போட்டிகளில், முதன்முறையாக அவ்வூர் ஊராட்சிப் பள்ளி மாணவியர் இறுதி போட்டியில் இரண்டாம் இடம் பிடித்தது பாராட்டுக்குரியது என, ஆசிரியர்கள் தெரிவித்தனர். வெற்றிபெற்ற மாணவியர், ஆசிரியர் நல்லமுத்துவையும், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் பாராட்டினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us