தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதிக கட்டடங்கள் கட்டுவதற்கு தடையில்லை

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதிக கட்டடங்கள் கட்டுவதற்கு தடையில்லை

சென்னை ஐ.ஐ.டி. வளாகத்தில் புதிக கட்டடங்கள் கட்டுவதற்கு தடையில்லை


UPDATED : ஜன 20, 2015 12:00 AM

ADDED : ஜன 20, 2015 10:42 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2015 12:00 AM ADDED : ஜன 20, 2015 10:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: ஐ.ஐ.டி., வளாகத்தில், 8,000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டு, புதிய கட்டடங்கள் கட்டப்படுவதை எதிர்த்த வழக்கை, பசுமை தீர்ப்பாய நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

சென்னை, ஐ.ஐ.டி., வளாகத்தில், புதிய கட்டுமான பணிகளுக்காக, 8,000க்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்பட்டது குறித்து, பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது.

தடை ஏன்?

அதில், கட்டடங்கள் கட்ட இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இதை எதிர்த்து, ஐ.ஐ.டி., சார்பில், 2014 மார்ச் 13ம் தேதி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையே, ஐ.ஐ.டி., பதிவாளர், மாணவர் விடுதி கட்டப்படுவதன் அவசியம் குறித்து, தனி மனு தாக்கல் செய்தார். அப்போது, ஐ.ஐ.டி., வளாகத்தில், இரண்டு விடுதிகள் மற்றும் கழிவுநீர் சுத்திரிப்பு நிலையம் கட்ட அனுமதி அளித்து, மற்ற கட்டடங்களுக்கு விதிக்கப்பட்ட தடை நீடிக்கும் என, 2014, அக். 20ம் தேதி, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், நீதிபதி சொக்கலிங்கம், உறுப்பினர் நாகேந்திரன் முன்னிலையில் நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழங்கிய உத்தரவு: மத்திய சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீட்டு அறிக்கைப்படி, மரம் வெட்டி கட்டடம் கட்டப்படுவதற்கு கல்வி நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இதுபோல், கல்வி நிறுவனங்கள் மரம் வெட்டும்போது, வனம் மற்றும் சுற்றுச்சூழல் அலுவலர்களிடம் உரிய அனுமதி பெற வேண்டும்.

மனு தள்ளுபடி

மேலும், ஐ.ஐ.டி., வளாகத்தில் நடத்தப்படும் நிகழ்ச்சியால், சுற்றுச்சூழல் பாதிக்கபடுவது குறித்து விசாரிக்கும் உரிமை, பசுமை தீர்ப்பாயத்தின் அதிகார வரம்புக்குள் வரவில்லை. அதனால், புதிய கட்டடங்கள் கட்ட தடை விதிக்க முடியாது. அதற்காக, விதிக்கப்பட்டு இருந்த இடைக்கால தடை விலக்கி கொள்ளப்படுகிறது. எதிர்த்து தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. இவ்வாறு, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us