தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளியில் ஆபத்தான குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்

பள்ளியில் ஆபத்தான குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்

பள்ளியில் ஆபத்தான குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்


UPDATED : ஜன 20, 2015 12:00 AM

ADDED : ஜன 20, 2015 12:04 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2015 12:00 AM ADDED : ஜன 20, 2015 12:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: இடிந்து விழக்கூடிய நிலையில் உள்ள ஆபத்தான குடிநீர் தொட்டியை, மாணவர்களை பயன்படுத்தி சுத்தம் செய்த சம்பவம், பெற்றோர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் வெங்கமேடு, அய்யன்காளிபாளையத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. அனுப்பர்பாளையம், அம்மாபாளையம், பூலுவப்பட்டி, நெருப்பெரிச்சல் பகுதிகளை சேர்ந்த 400க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இங்கு, 12 அடி ஆழம், 15 அடி அகலம் கொண்ட குடிநீர் தொட்டி, 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது; இடிந்து விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது.

பொங்கல் விடுமுறைக்குபின், நேற்று பள்ளி மீண்டும் திறக்கப்பட்டது. 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்கள் சிலரை, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்யுமாறு ஆசிரியர்கள் பணித்துள்ளனர். ஆபத்தான, ஆழமான குடிநீர் தொட்டியில் இறங்கி, மாணவர்கள் சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டனர். இதையறிந்து, பெற்றோர் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர். சிலர் கேள்வி எழுப்பியதும், அப்பணியை கைவிட்டு, மாணவர்கள் வகுப்புக்கு அனுப்பப்பட்டனர்.

பெற்றோர் கூறுகையில், "மாணவர்களை கொண்டு, குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ததை ஏற்க முடியாது. உரிய பணியாளர்களை கொண்டு, பாதுகாப்பு உபகரணங்களுடன் அப்பணியை மேற்கொள்ள வேண்டும்" என்றனர்.

தலைமை ஆசிரியர் சிதம்பரநாதனிடம் கேட்டபோது, "குடிநீர் தொட்டி மூடாமல் இருந்தது; அதை மூடி வைக்கும்படி மாணவர்களிடம் கூறினேன். அவர்கள், தொட்டிக்குள் இறங்கி விட்டனர். வழக்கமாக, ஊழியர்களை கொண்டே, குடிநீர் தொட்டி சுத்தப்படுத்தப்படும்" என்றார்.

முதன்மை கல்வி அலுவலர் முருகனிடம் கேட்டபோது, "விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us