ஜனவரி 21ம் தேதியுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி
ஜனவரி 21ம் தேதியுடன் நிறைவடைகிறது சென்னை புத்தக கண்காட்சி
UPDATED : ஜன 21, 2015 12:00 AM
ADDED : ஜன 21, 2015 10:13 AM
சென்னை: சென்னை புத்தக கண்காட்சி இன்றுடன் நிறைவு பெறுகிறது. நேற்று வரை, பல லட்சம் பேர், கண்காட்சிக்கு வந்ததாகவும், பல கோடி ரூபாய்க்கும் மேல், புத்தகங்கள் விற்றதாகவும், நிகழ்ச்சி அமைப்பாளர்கள் தெரிவித்தனர்.
சென்னை, ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியியல் கல்லுாரி மைதானத்தில், கடந்த 9ம் தேதி, 38வது, சென்னை புத்தக கண்காட்சி துவங்கியது.
கடந்த, 12 நாட்களாக, சென்னை மட்டுமின்றி, தமிழகம், பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கானோர் வந்து பார்வையிட்டு, புத்தகங்களை வாங்கி சென்றனர்.
இன்றுடன்(ஜனவரி 21), கண்காட்சி நிறைவு பெறுகிறது. நிறைவு விழா நிகழ்ச்சியில், சென்னை பல்கலை துணைவேந்தர் ஆர்.தாண்டவன் பங்கேற்கிறார். இதுகுறித்து பபாசி அமைப்பினர் கூறுகையில், "நேற்று வரை, பல லட்சம் பேர் கண்காட்சிக்கு வந்துள்ளனர். 10 கோடி ரூபாய் மதிப்பிலான புத்தகங்கள் விற்பனையாகி உள்ளன" என்றனர்.
