பாரதியார் பல்கலை சார்பில் 18 வீரர்களும், 8 வீராங்கனைகளும் தேர்வு
பாரதியார் பல்கலை சார்பில் 18 வீரர்களும், 8 வீராங்கனைகளும் தேர்வு
UPDATED : ஜன 21, 2015 12:00 AM
ADDED : ஜன 21, 2015 11:17 AM
கோவை: அகில இந்திய அளவில் அனைத்து பல்கலை தடகள போட்டியில் பங்கேற்க, பாரதியார் பல்கலை சார்பில், 18 வீரர்களும், 8 வீராங்கனைகளும் தேர்வு பெற்றனர்.
பெங்களூரு ராஜீவ்காந்தி பல்கலை சார்பில் தேசிய அளவில் அனைத்து பல்கலை கழகங்களுக்கான தடகள போட்டி நடக்கிறது. இதில் 135 பல்கலையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கின்றனர். கடந்த டிச.,மாதம் பாரதியார் பல்கலை சார்பில் அனைத்து கலை அறிவியல் கல்லுாரி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் நடந்தது.
இதில் ஒவ்வொரு பிரிவிலும் மாணவ, மாணவியர் வெற்றி பெற்றாலும், அகில இந்திய அளவில் நிர்ணயிக்கப்பட்ட ஒவ்வொரு பிரிவுக்கான நேரம், அளவு திறமை அடிப்படையில் வீரர்கள், வீராங்கனைகள் தேர்வு பெற்றனர்.
தேர்வுபெற்ற மாணவர்கள்
டாக்டர் என்.ஜி.பி.,கலை அறிவியல் கல்லுாரியின் துரைமுருகன், சுரேன், பிரவீன் குமார், தருண், அருள் பிரகாஷ், லட்சுமணன்; ஜி.ஆர்.டி., அறிவியல் கல்லுாரியின் கெவின் ரெனால்டோ; பொள்ளாச்சி சரஸ்வதி தியாகராஜா கல்லுாரியின் சரவணகுமார், தீபன் சக்ரவர்த்தி, பார்த்திபன்; பாரதியார் பல்கலை உடற்கல்வித்துறையின் கார்த்திக்; கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் செந்தில்மணி, ஞான சவுந்தரன் மற்றும் கார்த்திக், வெங்கடேஷ்வரன், முகமது அசாருதீன், முகமது சலாலுதீன், அஸ்வின்ராஜா ஆகியோர்.
தேர்வுபெற்ற மாணவியர்
டாக்டர் என்.ஜி.பி.,கலை அறிவியல் கல்லுாரி அனிதா, ஜெயந்தி; கோபி கலை அறிவியல் கல்லுாரி வசந்தமணி, பொன்கொடி; கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரியின் சந்தியா மற்றும் இனியா, சிவஅன்பரசி, கார்த்திகா ஆகியோர். இத்தகவலை பாரதியார் பல்கலை உடற்கல்வி இயக்குனர் முருகவேல் தெரிவித்தார்.
