தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிப்., 3ல் அசாம் மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய கால்பந்து போட்டி

பிப்., 3ல் அசாம் மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய கால்பந்து போட்டி

பிப்., 3ல் அசாம் மாநிலத்தில் 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய கால்பந்து போட்டி


UPDATED : ஜன 21, 2015 12:00 AM

ADDED : ஜன 21, 2015 11:41 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 21, 2015 12:00 AM ADDED : ஜன 21, 2015 11:41 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: அசாம் மாநிலத்தில், 14 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய கால்பந்து போட்டி, பிப்., 3ல் துவங்குகிறது. இதில் பங்கேற்கும் தமிழக அணியில், திருப்பூர் மைக்ரோகிட்ஸ் பள்ளி மாணவி மணியரசி இடம் பிடித்துள்ளார்.

இப்பள்ளி மாணவியர் மணியரசி, அழகுசத்தி, பிரியங்கா, பவித்ரா, அகத்தாகிரிஸ்டி, ஹரிப்பிரியா ஆகியோர், கால்பந்து போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர். இம்மாதம் நடைபெற உள்ள மண்டல கால்பந்து போட்டிக்கு, இவர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

கடந்த 2012ல், மாநில போட்டியில் பள்ளி அணி சார்பில் விளையாடிய இக்குழு, 2ம் இடம் பெற்றது. இந்திய பள்ளிகள் விளையாட்டு குழுமம் நடத்திய தேசிய அளவிலான போட்டிகளிலும், இவர்கள் பங்கேற்றுள்ளனர். 2014ல் புனேவில் நடந்த, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவு தேசிய கால்பந்து போட்டியில், தமிழக அணி சார்பில் மாணவி பிரியங்கா விளையாடினார்.

இதேபோல், மாணவி மணியரசியின் அபார ஆட்டம், தற்போது அவரை தமிழக அணியில் இடம்பெறச் செய்துள்ளது. அசாமில் நடைபெற உள்ள தேசிய கால்பந்து போட்டிக்கு, மணியரசி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us