ஜன. 28ம் தேதி துவங்குகிறது கிண்டி பொறியியல் கல்லூரியின் குருக்சேத்ரா!
ஜன. 28ம் தேதி துவங்குகிறது கிண்டி பொறியியல் கல்லூரியின் குருக்சேத்ரா!
UPDATED : ஜன 22, 2015 12:00 AM
ADDED : ஜன 22, 2015 10:09 AM
சென்னை: கிண்டி பொறியியல் கல்லூரி, 2015ம் ஆண்டிற்கான ‘குருக்சேத்ரா’ என்ற டெக்னோ-மேலாண்மை திருவிழாவை, ஜனவரி 28 முதல் 31ம் தேதி வரை நடத்துகிறது.
மாணவர்களால் திட்டமிட்டு நடத்தப்படும் ஒரு டெக்னோ மேலாண்மை திருவிழாவாக, குருக்சேத்ரா திகழ்கிறது. யுனெஸ்கோ அமைப்பின் ஆதரவும் இதற்கு உண்டு. தொழிற்கல்வி நிறுவனங்களுக்கும், தொழில் நிறுவனங்களுக்குமான பயன்மிகு உறவை ஏற்படுத்தி, பலப்படுத்துவதே இந்த விழாவின் நோக்கம்.
இந்த 2015ம் ஆண்டு நிகழ்வில், உலகம் முழுவதிலும், 800 கல்வி நிறுவனங்களிலிருந்து 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொள்ள உள்ளனர். இவ்விழாவில் கண்டறியப்படும் திறமைசாலி மாணவர்களுக்கு, பெரும் மதிப்புள்ள பரிசுகள் வழங்கப்படவுள்ளன.
பொறியியல் மாணவர்கள், தங்களின் திறமைகளை வெளிப்படுத்தவும், தங்களின் அறிவை சிறப்பாக்கி, மேம்படுத்திக் கொள்ளவும், இந்த திருவிழா ஒரு மிகச்சிறந்த வாய்ப்பு.
குருக்சேத்ராவில் இடம்பெறும் சில முக்கிய நிகழ்வுகள்:
God speed
Microsoft&'s Tame the code
Robowars
Alcatraz
Quiz
பயிற்சி பட்டறைகளுக்கான தலைப்புகள்:
Biomimicry
Sustainable solutions
Robotic Operating Systems
Follow your passion
Reverse Engineering
இவைதவிர, பல ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்களில் இருந்து, முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு உரை நிகழ்த்தவுள்ளார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
விரிவான தகவல்களுக்கு www.kurukshetra.org.in
