தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இடிந்துவிழும் நிலையில் பள்ளி - உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் மாணவர்கள்!

இடிந்துவிழும் நிலையில் பள்ளி - உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் மாணவர்கள்!

இடிந்துவிழும் நிலையில் பள்ளி - உயிருக்கு உத்தரவாதமற்ற நிலையில் மாணவர்கள்!


UPDATED : ஜன 23, 2015 12:00 AM

ADDED : ஜன 23, 2015 12:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 23, 2015 12:00 AM ADDED : ஜன 23, 2015 12:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மணலி புதுநகர்: இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ள கட்டடத்தில், அரசு உயர்நிலை பள்ளியின் வகுப்பறைகள் செயல்படுகின்றன. இதனால், அங்கு பயிலும் மாணவ, மாணவியரின் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

மணலி மண்டலத்துக்கு உட்பட்ட மணலி புதுநகரில், அரசு உயர்நிலை பள்ளி செயல்படுகிறது. 1989ம் ஆண்டு, வீட்டு வசதி வாரியம் மூலம், பள்ளி கட்டடம் கட்டப்பட்டது.

அதில், 131 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர். சரிவர பராமரிப்பு இல்லாததால், பள்ளி கட்டடம், மிகவும் சிதிலமடைந்து காணப்படுகிறது. கட்டடத்தின் மேற்கூரையில், சிமென்ட் கான்கிரீட் பெயர்ந்து, கம்பிகள் வெளியே தெரிகின்றன. வகுப்பறை கட்டடம், ஆங்காங்கே விரிசலுடன் காணப்படுகிறது. மழைக்காலத்தில், மழைநீர் சுவரில் ஊறியதால் விரிசல் கண்டுள்ளது. இதனால், எந்த நேரத்திலும், கட்டடத்திற்கு அபாயம் ஏற்படலாம் என்ற சூழல் நிலவுகிறது. இந்த நிலையிலும் அந்த கட்டடத்தில், வகுப்பறைகள் செயல்படுகின்றன.

பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பும் பெற்றோர், இதனால் அச்சத்தில் உள்ளனர். மழை காலத்தில், வகுப்பறைக்குள் மழைநீர் கசிந்து மாணவ, மாணவியர் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில், மழைநீர் வகுப்பறையில் தேங்கியும் நிற்கும்.

குற்றச்சாட்டு

ஆனால், இதுவரை கல்வி துறை, கட்டடத்தை சீரமைக்க முன் வரவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பள்ளி கட்டடத்தை சீரமைக்க வேண்டும். அதுவரையில் வேறொரு கட்டடத்தில் பள்ளி செயல்பட வேண்டும். கல்வி துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பரா? என்பதே பெற்றோர் மற்றும் மாணவரின் கேள்வி. பள்ளி கல்வி துறை அலுவலர் கூறுகையில், "வீட்டு வசதி வாரியம், அரசு உயர்நிலை பள்ளி உள்ள இடத்தை அளந்து, பள்ளி கல்வி துறையிடம், ஒப்படைக்கும். அதையடுத்து, பொதுப்பணி துறையிடம் பள்ளி மாற்றப்பட்டு, பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள, விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

தனியார் பள்ளியில் படிக்க வசதியின்றி, அரசு பள்ளியில் மகனை சேர்த்தேன். பாழடைந்த கட்டடத்தை பார்த்தால், பள்ளிக்கு குழந்தைகளை அனுப்பவே, பயமாக உள்ளது. வேறு வழியின்றி, அனுப்பி வருகிறேன்.

தனசேகர், 10ம் வகுப்பு மாணவரின் தந்தை

ஆபத்தான நிலையில் பள்ளி கட்டடம் உள்ளது. அடுத்த ஆண்டு, என் மகளை, வேறு பள்ளியில் சேர்க்க முடிவு செய்துள்ளேன். இருப்பினும், அதுவரை குழந்தைகளின் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என, தெரியவில்லை.

வேலு, 9ம் வகுப்பு மாணவியின் தந்தை

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us