UPDATED : ஜன 24, 2015 12:00 AM
ADDED : ஜன 24, 2015 10:33 AM
கோவை: மண்டல அளவில் இன்ஜி., கல்லூரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டியில் சி.ஐ.டி., கல்லூரியும், சூர்யா கல்லூரியும் காலிறுதிக்கு தகுதி பெற்றன.
கோவைப்புதூர் கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி சார்பில் 6வது சென்ட்டைஸ் சாம்பியன்ஷிப் ஹேண்ட்பால் போட்டியில், ஈரோடு, நீலகிரி, திருப்பூர், கோவை ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 26 கல்லூரி அணிகள் போட்டியில் பங்கேற்றன.
* முதல் சுற்று, முதல் போட்டியில் எஸ்.என்.எஸ்., தொழில்நுட்ப கல்லூரி 19-15 கோல் கணக்கில் ஆர்.வி.எஸ்., இன்ஜி., தொழில்நுட்ப கல்லூரியும்; 2வது போட்டியில், தமிழ்நாடு இன்ஜி., கல்லூரி 20-10 கோல் கணக்கில் ஸ்ரீகுரு தொழில்நுட்ப கல்லூரியையும்; 3வது போட்டியில், கே.பி.ஆர்.,தொழில்நுட்ப கல்லூரி 13-12 கோல் கணக்கில் ராமகிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியையும்; 4வது போட்டியில், ஈரோடு செங்குந்தர் இன்ஜி.,கல்லூரி 22-17 கோல் கணக்கில் கலைஞர் கருணாநிதி தொழில்நுட்ப கல்லூரியையும்; 5வது போட்டியில், கற்பகம் தொழில்நுட்ப கல்லூரி 12-7 கோல் கணக்கில் கற்பகம் தொழில்நுட்ப கல்லூரியையும் வென்றன.
* 2வது சுற்று, முதல் போட்டியில், சூர்யா இன்ஜி.,கல்லூரி 18-10 கோல் கணக்கில் எஸ்.என்.எஸ்.,தொழில்நுட்ப கல்லூரியையும்; 2வது போட்டியில், ஈரோடு செங்குந்தர் கல்லூரி 24-20 கோல் கணக்கில் குமரகுரு தொழில்நுட்ப கல்லூரியையும்; 3வது போட்டியில், கோவை தொழில்நுட்ப கல்லூரி 20-11 கோல் கணக்கில் தமிழ்நாடு இன்ஜி.,கல்லூரியையும் வென்றன.
