தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/உயர்கல்வி நிறுவனங்களில் காந்திய சிந்தனை கல்வியை கொண்டுவர பரிந்துரைக்க முடிவு

உயர்கல்வி நிறுவனங்களில் காந்திய சிந்தனை கல்வியை கொண்டுவர பரிந்துரைக்க முடிவு

உயர்கல்வி நிறுவனங்களில் காந்திய சிந்தனை கல்வியை கொண்டுவர பரிந்துரைக்க முடிவு


UPDATED : ஜன 24, 2015 12:00 AM

ADDED : ஜன 24, 2015 10:52 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 24, 2015 12:00 AM ADDED : ஜன 24, 2015 10:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திகிராமம்: உயர்கல்வி நிறுவனங்களில் காந்திய சிந்தனை கல்வியை கொண்டுவர மத்திய அரசுக்கு பரிந்துரைப்பது என காந்திகிராம பல்கலையில் நடந்த வட்டமேஜை மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது.

மாநாட்டை பல்கலை வேந்தர் ரனானா ஜப்வாலா துவக்கி வைத்தார். துணைவேந்தர் நடராஜன் வரவேற்றார். பல்கலை வேந்தர் ரனானா ஜப்வாலா கூறியதாவது: உயர்கல்வி நிறுவனங்கள் வழங்கும் பட்டங்கள் வெறும் வேலைவாய்ப்பிற்கு மட்டுமல்ல. இளைஞர்களின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டும். காந்திய நிறுவனங்கள் செயல்வழி கற்றல் முறையில் பாடத்திட்டங்களை வடிவமைத்துள்ளன. வாழ்க்கை கல்வியை அளித்து வருகின்றன.

பல்கலை மானியக்குழு விதிக்கு ஏற்ப உயர் கல்வியில் காந்திய சிந்தனைகளை கொண்டு வருவதில் பல தடைகள் உள்ளன. இதை களைய காந்திய நிறுவனங்கள் ஒருங்கிணைந்து செயல்படுவது அவசியம். இதற்கான முதல் முயற்சியாக வட்டமேஜை மாநாடு நடத்தப்பட்டது. காந்தியின் தொலைநோக்கு சிந்தனைகளை வலுப்படுத்தி நவீன காலத்திற்கு ஏற்ப புது அர்த்தங்களுடன் மக்களிடையே விழிப்புஉணர்வு ஏற்படுத்த வேண்டும்.

பல்கலை மானியக்குழு, மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உயர்கல்வியில் காந்திய சிந்தனை கல்விக்கு தனி மதிப்பை ஏற்படுத்த வேண்டும். மாநாடு முடிவுகளை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளோம், என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us