தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்

மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில் திறமையை வெளிப்படுத்திய மாணவர்கள்


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாவட்ட அளவிலான கால்பந்து போட்டியில், மாணவர்கள், திறமையை வெளிப்படுத்தினர்.

வடவள்ளியில் உள்ள பிரபஞ்ச ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி, பிரபஞ்ச டிராபி 2015 எனும் தலைப்பில், கல்வீரம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மாடல் மெட்ரிக்., பள்ளியில் துவங்கியது.

பத்து வயதுக்கு உட்பட்ட சிறுவர்களுக்கான போட்டி, 14 வயதுக்கு உட்பட்ட மிக இளையோர்க்கான போட்டி, 19 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களுக்கான போட்டி என மூன்று பிரிவாக நடக்கிறது. 14 வயதுக்குட்பட்டோர் போட்டியில், யுவபாரதி சி.பி.எஸ்.இ., பள்ளி, ஜி.ஜி., ஸ்போர்ட்ஸ் அகாடமி, சின்தயா வித்யாலயா சி.பி.எஸ்.இ., ஸ்டேன்ஸ், ராயல் புட்பால் கிளப், சின்மயா வித்யாலயா மெட்ரிக்., பிரபஞ்ச ஸ்போர்ட்ஸ் அகாடமி, வித்யா நிகேதன் மெட்ரிக்., பள்ளிகள், காலிறுதிக்கு தகுதி பெற்றன.

19 வயதுக்கு உட்பட்டோர் போட்டியில், சுகி ஸ்போர்ட்ஸ் அகாடமி, சின்மயா வித்யாலயா மெட்ரிக்., வித்ய நிகேதன் சி.பி.எஸ்.இ., ராயல் புட்பால் கிளப், மதுக்கரை புட்பால் கிளப், சவுடேஸ்வரி வித்யாலயா, ஸ்பேர்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமி, ராகவேந்திரா மெட்ரிக்., அணிகள் காலிறுதிக்கு தகுதி பெற்றன.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us