தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இரவுநேர "பார்" ஆக மாறிய அரசுப் பள்ளி வளாகம்

இரவுநேர "பார்" ஆக மாறிய அரசுப் பள்ளி வளாகம்

இரவுநேர "பார்" ஆக மாறிய அரசுப் பள்ளி வளாகம்


UPDATED : ஜன 27, 2015 12:00 AM

ADDED : ஜன 27, 2015 12:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 27, 2015 12:00 AM ADDED : ஜன 27, 2015 12:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் காந்தி நினைவு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகம் இரவுநேர "பார்" ஆக மாறிவருகிறது. இப்பள்ளி 75 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டது.

பத்து ஆண்டுகளுக்கு முன் 1200 மாணவர்கள் படித்த நிலையில் போதிய அடிப்படை வசதி இல்லாததால் தற்போது 500 பேர்தான் படிக்கின்றனர். இரவு காவலாளி இல்லை. 200 மீட்டருக்கு சுற்றுச்சுவர் இல்லை. பெரும்பாலான வகுப்பறைகளுக்கு கதவுகள் இல்லை. இதனால் இரவில் பலர் பள்ளி வளாகத்திற்குள் சென்று பாராக பயன்படுத்துகின்றனர்.

இவ்வளாகத்தில் கழிப்பறை உட்பட சில பகுதியில் உள்ள கட்டடங்கள் பாதுகாப்பு இல்லாதவை என ஆறு ஆண்டுகளுக்கு முன் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு சான்று வழங்கினர். இடித்துவிடவும் பரிந்துரை செய்தனர். ஆனால் இன்றும் அவை இடிக்கப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளன.

மாணவர்கள் கூறுகையில், "திங்களன்று வகுப்பறைக்கு செல்லும்போது மது பாட்டில்கள், டம்ளர்களை அகற்றிவிட்டு சுத்தம் செய்வதுதான் எங்கள் முதல் வேலையாக இருக்கும்" என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us