தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தண்ணீர் கேட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தண்ணீர் கேட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்

தண்ணீர் கேட்டு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 02:27 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 02:27 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாகர்கோவில்: நாகர்கோவில் கோட்டாரில் அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு 200 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். கடந்த ஒரு மாத காலமாக, இங்கு கடுமையான தண்ணீர் பிரச்னை இருந்து வருகிறது.

முறையாக தண்ணீர் வராததால் மாணவ, மாணவிகள் கேன் தண்ணீர் வாங்கி குடிநீர் தேவைக்கு பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் பிற தேவைகளுக்கும் தண்ணீர் கிடைப்பதில்லை. நேற்று காலையில் பல் துலக்க கூட தண்ணீர் வரவில்லை. இதனால் அவதிப்பட்ட மாணவ, மாணவிகள் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பொதுப்பணித்துறையிடம் பல முறை சொல்லியும் முடிவு ஏற்படவில்லை என்று கல்லூரி நிர்வாகமும் கைவிட்டதால் போராட்டத்தில் ஈடுபட்டதாக மாணவிகள் தெரிவித்தனர். பின்னர் கோட்டார் போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us