தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவு விழா!

கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவு விழா!

கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனத்தின் 10 ஆண்டு நிறைவு விழா!


UPDATED : ஜன 28, 2015 12:00 AM

ADDED : ஜன 28, 2015 06:33 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 28, 2015 12:00 AM ADDED : ஜன 28, 2015 06:33 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையில் அமைந்த கிரேட் லேக்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆப் மேனேஜ்மென்ட், தனது பத்தாண்டு நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடியது.

சென்னையில், ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இவ்விழாவில், டி.வி.எஸ். மோட்டார்ஸ் - வேணு ஸ்ரீனிவாசன் உள்ளிட்ட பல சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டனர்.

கிரேட் லேக்ஸ் கல்வி நிறுவனம், ராமச்சந்திரா பல்கலையுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத்தையும் சேர்த்து, பிற கல்விசார் திட்டங்களுக்காகவும் இந்த ஒத்துழைப்பு உடன்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இளைய மேலாண்மை கல்வி நிறுவனமாக இருக்கும் இக்கல்வி நிறுவனம், உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களான ஜார்ஜியா ஸ்டேட் யுனிவர்சிட்டி, நான்யாங் டெக்னாலஜிக்கல் யுனிவர்சிட்டி, யுனிவர்சிட்டி ஆப் கூஸ்டன் மற்றும் யுனிவர்சிட்டி ஆப் போர்டியக்ஸ் ஆகியவற்றுடன் பல ஒத்துழைப்பு உடன்பாடுகளை மேற்கொண்டுள்ளது.

மேலும், 2014ம் ஆண்டில், பிரிட்டனின் AMBA (Association of MBA) எனும் அமைப்பால், இக்கல்வி நிறுவனத்தின் PGPM மற்றும் PGXPM திட்டங்களுக்கு நற்சான்று வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us