மண்டல ஹேண்ட்பால் போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி வெற்றி
மண்டல ஹேண்ட்பால் போட்டியில் ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி வெற்றி
UPDATED : ஜன 31, 2015 12:00 AM
ADDED : ஜன 31, 2015 10:58 AM
கோவை: மண்டல ஹேண்ட்பால் போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி., கல்லூரி வெற்றி பெற்றது. கோவைப்புதூர் கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி சார்பில் கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் ஆகிய மாவட்ட இன்ஜி.,கல்லூரி மாணவர்களுக்கான ஹேண்ட்பால் போட்டி கல்லூரியில் நடந்தது.
காலிறுதி போட்டியில், ஈரோடு சூர்யா இன்ஜி., கல்லூரி, 17-9 கோல் கணக்கில் கோவை தொழில்நுட்ப கல்லூரியையும்; 2வது போட்டியில், ஈரோடு செங்குந்தர் இன்ஜி., கல்லூரி, 25-27 கோல் கணக்கில் கே.பி.ஆர்.,தொழில்நுட்ப கல்லூரியையும்; 3வது போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி, 33-22 என்ற கோல் கணக்கில் கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரியையும் வென்றன.
அரைஇறுதி போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி, 33-22 கோல் கணக்கில் ஈரோடு செங்குந்தர் இன்ஜி.,கல்லூரியை வென்றது. மற்றொரு அரைஇறுதி போட்டியில், சூர்யா இன்ஜி.,கல்லூரி வெற்றி பெற்றது. 3வது இடத்துக்கான போட்டியில், ஈரோடு சூர்யா இன்ஜி.,கல்லூரி, 35-24 புள்ளி கணக்கில் ஈரோடு செங்குந்தர் இன்ஜி.,கல்லூரியை வென்றது.
இறுதி போட்டியில், ராமகிருஷ்ணா இன்ஜி.,கல்லூரி, 2வது இடம் பெற்றது. கிருஷ்ணா தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சவுந்தரராஜன் பரிசளித்தார்.
