தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில் 12வது புத்தக திருவிழா

பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில் 12வது புத்தக திருவிழா

பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில் 12வது புத்தக திருவிழா


UPDATED : ஜன 31, 2015 12:00 AM

ADDED : ஜன 31, 2015 11:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 31, 2015 12:00 AM ADDED : ஜன 31, 2015 11:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: பின்னல் புக் டிரஸ்ட், பாரதி புத்தகாலயம் சார்பில், 12வது புத்தக திருவிழா, திருப்பூர் கே.ஆர்.சி., சிட்டி சென்டரில், நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கத்துடன் நேற்று துவங்கியது.

எம்.எல்.ஏ., தங்கவேல் பேசியதாவது: காந்தியை சுட்டுக் கொன்றவனுக்கு சிலை வைக்க வேண்டும் என ஒரு தரப்பினர் மத்தியில் கோரிக்கை எழுந்துள்ளது. அந்தளவு தைரியம் நமது நாட்டில் உருவாகியிருப்பது, கவலை அளிக்கிறது. காந்தியின் வாழ்க்கையில், பல்வேறு விவாதங்கள் இருக்கலாம். இன்றைய காந்தி என்கிற தலைப்பில் வெளிவந்துள்ள புத்தகத்தில், காந்தியின் வாழ்க்கையில் உள்ள பல்வேறு விவாதங்களுக்கு பதில் கிடைக்கிறது. இக்கால மாணவர்களிடம், வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது.

நமது நாட்டின் வரலாறை, இளைய தலைமுறையினரிடம் சரியாக எடுத்துச் செல்ல, வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும். அவ்வகையில், திருப்பூர் பகுதி மக்களுக்கு மிகப்பெரிய வரப்பிரசாதமாக, ஆண்டுதோறும் புத்தக கண்காட்சி நடத்தப்படுகிறது. இவ்வாறு, அவர் பேசினார். மொத்தம் 105 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு வாங்கும் புத்தகங்களுக்கு 10 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது; கண்காட்சி, பிப்., 8 வரை நடக்கிறது; தினமும் காலை 11:00 முதல் இரவு 9:30 மணி வரை பார்வையிடலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us