தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை வசதிகள்கூட இல்லாத நர்சிங் பயிற்சி விடுதி - எப்போது விடிவு?

அடிப்படை வசதிகள்கூட இல்லாத நர்சிங் பயிற்சி விடுதி - எப்போது விடிவு?

அடிப்படை வசதிகள்கூட இல்லாத நர்சிங் பயிற்சி விடுதி - எப்போது விடிவு?


UPDATED : பிப் 02, 2015 12:00 AM

ADDED : பிப் 02, 2015 11:09 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 02, 2015 12:00 AM ADDED : பிப் 02, 2015 11:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: நெல்லை மருத்துவக் கல்லுாரி நர்சிங் பயிற்சி விடுதியில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் மாணவிகள் சிரமப்படுகின்றனர்.

திருநெல்வேலி அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, 1965ல் ஏற்படுத்தப்பட்ட பழமையான மருத்துவக் கல்லுாரிகளில் ஒன்றாகும். இந்த மருத்துவமனை வளாகத்தில் நர்சிங் பயிற்சி மையம் செயல்படுகிறது. மூன்றரை ஆண்டுகள் நடக்கும் இந்த பயிற்சியில், 503 மாணவிகள் பயில்கின்றனர்.

இவர்களுக்கான விடுதி, வளாகத்திலேயே உள்ளது. அங்கு தங்கியிருக்கும் மாணவிகள் போதிய அடிப்படை வசதிகள் இல்லாமல் தவிக்கின்றனர். இதனால் விரக்தியடைந்த மாணவிகள் இதுகுறித்து கல்லுாரி முதல்வர், அரசு அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

குடிக்கவோ, குளிக்கவோ தண்ணீர் வசதி இல்லை. குடிப்பதற்காக மாணவிகளே கேன் தண்ணீர் வாங்கி பயன்படுத்திக் கொள்கின்றனர்.
முறைவைத்து தண்ணீர் வழங்குவதால், மாணவிகள் பயிற்சிக்கு செல்லும் முன்பாக குளிக்காமலேயே செல்லும் நிலை உள்ளது.

சாதாரண அங்கன்வாடி மையங்களுக்கு கூட எரிவாயு அடுப்பு வசதி வழங்கப்படுகிறது. இந்த வளாகத்தில் சமையலுக்கு விறகுகளையே பயன்படுத்துகின்றனர். 500 மாணவிகளுக்கான சமையலை மேற்கொள்ள மூன்று சமையலர்கள்தான் உள்ளனர். ஒருவர் விடுமுறையில் சென்றால் மொத்த சமையலும் பாதிப்படைகிறது.

செவிலியர்கள் விடுதி வளாகத்தை சுற்றிலும் முட்செடிகள் மண்டியிருப்பதால் பாம்புகள் பயமுறுத்துகின்றன. மருத்துவக்கல்லுாரி 50வது ஆண்டு பொன்விழாவை கொண்டாடும் இத்தருணத்தில் துவக்ககாலத்தில் இருந்ததுபோலவே, இன்னமும் செவிலியர் விடுதி வளாகம் இருப்பது அதிர்ச்சியாக உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us