தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஓவிய போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இலங்கை அகதி மாணவி

ஓவிய போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இலங்கை அகதி மாணவி

ஓவிய போட்டியில் இரண்டாமிடம் பிடித்த இலங்கை அகதி மாணவி


UPDATED : பிப் 03, 2015 12:00 AM

ADDED : பிப் 03, 2015 11:55 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 03, 2015 12:00 AM ADDED : பிப் 03, 2015 11:55 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ராமேஸ்வரம்: இலங்கை அகதி மாணவி, மாநில ஓவிய போட்டியில் இரண்டாமிடம் பிடித்து சாதனை படைத்தார்.

கடந்த 2009 ல், இலங்கையில் நடந்த கடும் போரில் குடும்பத்துடன் தப்பி, தமிழகத்தில் அகதியாக தஞ்சமடைந்த திரிகோணமலையை சேர்ந்த மாணவி சல்மியா, 16, மண்டபம் அகதிகள் முகாமில் உள்ள அரசு பள்ளியில் 6ம் வகுப்பில் சேர்ந்தார். தற்போது, பிளஸ் 1 படிக்கும் சல்மியா, ஓவியத்தில் சிறந்த மாணவியாக திகழ்கிறார்.

இவர் கடந்த மாதம் மாவட்ட அளவில் நடந்த ஓவிய போட்டியில் முதலிடம் பிடித்தார். பின்,’ மரம் நடுவோம், மழை பெறுவோம்’ என்ற தலைப்பில், வேலூரில் நடந்த மாநில ஓவிய போட்டியில், 2ம் இடம் பிடித்து கல்வி அமைச்சரிடம் பரிசு பெற்றார். உலகில் சமாதானம், பசுமை புரட்சி பாதுகாத்திட மாணவி தீட்டிய ஓவியத்திற்கு பரிசு கிடைத்ததற்கு, பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டினர்.

மாணவி சல்மியா கூறுகையில், ‘ இலங்கை ரானுவத்தின் குண்டு மழைக்கு எனது குடும்பம் தப்பினாலும், அங்கு பல சொந்தங்களை இழந்தோம். தூங்கும் போது கூட கனவில் குண்டு சத்தம் கேட்கும். உலகில் அமைதி ஏற்படவும், பசுமை புரட்சி வலியுறுத்தி நான் வரைந்த ஓவியத்திற்கு, மாநில அரசின் பாராட்டு கிடைத்தது, மகிழ்ச்சியாக உள்ளது” என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us