தேசிய தடகள போட்டியில் திருப்பூர் கல்லூரி மாணவர் 3வது இடம்
தேசிய தடகள போட்டியில் திருப்பூர் கல்லூரி மாணவர் 3வது இடம்
UPDATED : பிப் 04, 2015 12:00 AM
ADDED : பிப் 04, 2015 11:22 AM
திருப்பூர்: இந்திய பல்கலை., இடையேயான தேசிய தடகள போட்டியில், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவர் தருண், 3வது இடத்தை பெற்றார்.
திருப்பூர் மாவட்டம், அவிநாசியை சேர்ந்த மாணவர் தருண். கோவையிலுள்ள என்.ஜி.பி., கல்லூரியில் 2ம் ஆண்டு பி.பி.ஏ., படித்து வருகிறார். கோவை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற, பாரதியார் பல்கலை., இடையேயான 400 மீ., தடை தாண்டுதல், 4*100 மீ., தொடர் ஓட்டத்தில், தருண் முதலிடம் பெற்றார்.
இதன்மூலம், கர்நாடக மாநிலம், மங்களூர் ஆல்வா பல்கலை.,யில் நடந்த தேசிய தடகளப் போட்டிக்கு, இவர் தகுதி பெற்றார். கடந்த மாதம் நடந்த தேசிய தடகளப் போட்டியில், 400 மீ., தடை தாண்டுதல் ஓட்டத்தில், 52.3 நொடிகளில் கடந்து, 3வது இடத்தை பெற்றார். இதேபோல், 4*400 மீ., தொடர் ஓட்டத்தில், இலக்கு தூரத்தை 3.15 நொடிகளில் கடந்து, 3வது இடம் பிடித்தார்.
இந்திய பல்கலை., இடையேயான தேசியப் போட்டியில், திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, மாணவர் தருண் மட்டுமே பங்கேற்றிருந்தார்.
