காந்திகிராம பல்கலை பேராசிரியருக்கு அறிவியல் விஞ்ஞானி விருது
காந்திகிராம பல்கலை பேராசிரியருக்கு அறிவியல் விஞ்ஞானி விருது
UPDATED : பிப் 05, 2015 12:00 AM
ADDED : பிப் 05, 2015 12:09 PM
அ நிறம் | அளவு
காந்திகிராமம்: காந்திகிராம பல்கலை வேதியியல் பேராசிரியருக்கு தமிழக அறிவியல் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அறிவியல் விஞ்ஞானி விருது வழங்கப்படுகிறது. இந்த விருது கால்நடை, இயற்பியியல், வேதியியல், வேளாண்மை, உயிரியியல், உள்ளிட்ட 10 துறைகளில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு வழங்கப்படும்.
அவர்கள் ரூ.25 ஆயிரம் ரொக்கம், ’ஷீல்டு’ம் பெறுவர்.
வேதியியல் துறையில் ’நுண்உணர்வு’ தொழில்நுட்பத்தில் சிறப்பாக செயல்பட்ட காந்திகிராம பல்கலை இணை பேராசிரியர் ஆபிரகாம்ஜானுக்கு 2012 ஆண்டிற்கான தமிழக அறிவியல் விஞ்ஞானி விருது கிடைத்துள்ளது. இதுவரை அவர் நுண்உணர்வு தொழில்நுட்பத்தில் 110 ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்துள்ளார்.
