தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘இந்திய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7 சதவீதம் அவசியம்’

‘இந்திய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7 சதவீதம் அவசியம்’

‘இந்திய பொருளாதார வளர்ச்சி ஆண்டுக்கு 7 சதவீதம் அவசியம்’


UPDATED : பிப் 05, 2015 12:00 AM

ADDED : பிப் 05, 2015 12:10 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 05, 2015 12:00 AM ADDED : பிப் 05, 2015 12:10 PM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுடில்லி: இந்திய பொருளாதாரம் ஆண்டுக்கு, 7 - 8 சதவீதம் வளர்ச்சி காண்பது அவசியம் என, மத்திய நிதித் துறை இணையமைச்சர் ஜெயந்த் சின்கா தெரிவித்தார்.

டில்லியில், 15வது நிலையான அபிவிருத்தி மாநாட்டில் கலந்து கொண்ட அவர், மேலும் கூறியதாவது: இளைஞர்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகள் உருவாக, இந்தியாவின் பொருளதாரம் ஆண்டுக்கு, 7 - 8 சதவீதம் வளர்ச்சி காண்பது மிகவும் அவசியம்.

அதுமட்டுமின்றி, அடுத்த 10 ஆண்டுகளில், நம் பொருளாதார பலம் இரு மடங்கு அதிகரிக்கவும், அந்த வளர்ச்சி அத்தியாவசியமான ஒன்று. மேற்கண்ட இலக்குகள் எட்டப்பட வேண்டும் எனில், உற்பத்தி திறனை கட்டமைப்பதுடன், நம் வளர்ச்சி நிலையானதாக இருப்பதை உறுதி செய்து கொள்வது மிக முக்கியம்.

இதுதவிர, சுற்றுப்புறச் சூழலை பேணி பாதுகாப்பதும் அவசியமாக உள்ளது. ஏனெனில், ஒவ்வொரு நாட்டிற்கும், காலநிலை மாறுபாடு என்பது, மிக பெரும் சவாலாக உருவெடுத்து உள்ளது. எனவே, காலநிலையை உறுதிப்படுத்தி கொள்ளக்கூடிய கண்டுபிடிப்புகளே, தற்போதைய உண்மையான தேவை.

புதிய அடிப்படை ஆண்டின் கணக்கீட்டின்படி, கடந்த 2013 - 14ல், நாட்டின் பொருளாதாரம், 6.9 சதவீதம் வளர்ச்சி கண்டுள்ளது. இது, பழைய அடிப்படை ஆண்டின் கணக்கீட்டின்படி, வெறும், 4.7 சதவீதமாக மட்டுமே மதிப்பிடப்பட்டிருந்தது. இவ்வாறு, சின்கா பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us