தேசிய சைக்கிள் போட்டியில் பங்கேற்க அன்னுார் மாணவியர் தேர்வு
தேசிய சைக்கிள் போட்டியில் பங்கேற்க அன்னுார் மாணவியர் தேர்வு
UPDATED : பிப் 06, 2015 12:00 AM
ADDED : பிப் 06, 2015 11:55 AM
அன்னுார்: தேசிய அளவிலான சைக்கிள் போட்டியில் பங்கேற்க தமிழகம் சார்பில், அன்னுார் மாணவியர் மூவர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.
கேரளாவில், 35வது தேசிய விளையாட்டு போட்டிகள் நடந்து வருகிறது. இதில் சைக்கிள் போட்டியில், தமிழகம் சார்பில், பங்கேற்க, தமிழ்நாடு சைக்கிள் சங்கம் சார்பில், தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் அன்னுாரை சேர்ந்த மணிஷா, காயத்ரி, நந்தினி ஆகிய மூவரும், திருச்சியை சேர்ந்த சிந்துஜாவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
நந்தினி அன்னுார் செயின்ட் மேரீஸ் மெட்ரிக் பள்ளியிலும், காயத்ரி, பண்ணாரி அம்மன் பொறியியல் கல்லுாரியிலும், மணிஷா, பஞ்சாப் பல்கலையிலும் படிக்கின்றனர். தமிழகத்தின் நால்வர் அணியுடன், அணி மேலாளராக பொன்னுச்சாமி, பயிற்சியாளராக கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செல்கின்றனர்.
தேசிய சைக்கிள் போட்டியில், தொழில்நுட்ப நடுவராக பணியாற்ற, செயின்ட் மேரீஸ் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் விக்னேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.
