தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வாலிபால் போட்டியில் ஏ.வி.பி. மெட்ரிக் அணி வெற்றி

வாலிபால் போட்டியில் ஏ.வி.பி. மெட்ரிக் அணி வெற்றி

வாலிபால் போட்டியில் ஏ.வி.பி. மெட்ரிக் அணி வெற்றி


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 10:50 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 10:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: திருப்பூரில் நடைபெற்ற அருள்ஜோதி நினைவு சுழற்கோப்பை வாலிபால் போட்டியில், ஏ.வி.பி., மெட்ரிக் அணி கோப்பையை வென்றது.

திருப்பூர் ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி மற்றும் மெட்டல் டவுன் ரோட்டரி கிளப் இணைந்து அருள்ஜோதி நினைவு சுழற்கோப்பை வாலிபால் போட்டியை, அப்பள்ளி மைதானத்தில் நடத்தின. மாணவர் பிரிவில் 25 பள்ளிகள், மாணவியர் பிரிவில் 20 பள்ளிகள் பங்கேற்றன.

மிக மூத்தோர் மாணவர் பிரிவில், ஏ.வி.பி., டிரஸ்ட் பள்ளி அணியும், மூத்தோர் மாணவர் பிரிவில் வேலவன் மெட்ரிக் பள்ளி அணியும் வெற்றி பெற்றது. மிக மூத்தோர் மாணவியர் பிரிவில், ஜெய்வாபாய் பள்ளி அணியும்; மூத்தோர் மாணவியர் பிரிவில், மைக்ரோ கிட்ஸ் பள்ளி அணியும் வெற்றி பெற்றன. பரிசளிப்பு விழாவுக்கு, மாவட்ட வாலிபால் கழக தலைவர் ரங்கசாமி தலைமை வகித்தார்.

மாவட்ட விளையாட்டு அலுவலர் ராமலிங்கம், மாவட்ட வாலிபால் கழக செயலாளர் தங்கமணி ஆகியோர், வெற்றிபெற்ற அணியினருக்கு பரிசு வழங்கினர். நாமக்கல் பாரதி மெட்ரிக் பள்ளியில் நடந்த மண்டல அளவிலான குத்துச்சண்டையில், 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில், ஏ.வி.பி., மெட்ரிக் மாணவி செல்வநாயகி முதலிடம் பெற்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us