தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மைதானம் குறித்த தினமலர் செய்தி அடிப்படையிலான வழக்கை பரிசீலிக்க உத்தரவு

பள்ளி மைதானம் குறித்த தினமலர் செய்தி அடிப்படையிலான வழக்கை பரிசீலிக்க உத்தரவு

பள்ளி மைதானம் குறித்த தினமலர் செய்தி அடிப்படையிலான வழக்கை பரிசீலிக்க உத்தரவு


UPDATED : பிப் 07, 2015 12:00 AM

ADDED : பிப் 07, 2015 11:49 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : பிப் 07, 2015 12:00 AM ADDED : பிப் 07, 2015 11:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை பெருங்குடி அரசு மேல்நிலைப் பள்ளி விளையாட்டு மைதானம், பயனற்று பூட்டிய நிலையில் உள்ளதாக தினமலர் நாளிதழ் செய்தியை ஆதாரமாகக் கொண்டு தாக்கலான வழக்கில், மனுவை பரிசீலிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.

மதுரை கீழமாத்தூர் சபீர் முகமது தாக்கல் செய்த பொது நல மனு: பெருங்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த, பள்ளி எதிரே மைதானத்திற்கு ஒரு ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. மைதானத்தைச் சுற்றி சுற்றுச்சுவர், முன்புறம் கேட் அமைக்கப்பட்டது. மைதானத்தை பள்ளி நிர்வாகம், கல்வி அதிகாரிகள் முறையாக பராமரிக்கவில்லை.

புதர் மண்டியதால் விளையாட முடியவில்லை. விளையாட்டு உபகரணங்கள் இல்லை. இங்கிருந்து வகுப்பறைகளுக்குள் பூச்சிகள் புகுந்து விடுகின்றன. விளையாட்டு மைதானம் பயன்பாடின்றி பூட்டிய நிலையில் உள்ளதாக தினமலர் நாளிதழில் 2014 ஜூன் 9ல் செய்தி வெளியானது. மைதானத்தை சீர்படுத்தி பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி மதுரை கலெக்டர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு மனு அனுப்பினேன். நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டார்.

தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி எஸ்.தமிழ்வாணன் பெஞ்ச் விசாரித்தது. நேற்று வக்கீல்கள் கோர்ட் புறக்கணிப்பில் ஈடுபட்டதால் மனுதாரரே ஆஜரானார். நீதிபதிகள், மனுவை அதிகாரிகள் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும், என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us