மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் பச்சையப்பன் அணி முதலிடம்
மண்டல அளவிலான கால்பந்து போட்டியில் பச்சையப்பன் அணி முதலிடம்
UPDATED : பிப் 08, 2015 12:00 AM
ADDED : பிப் 08, 2015 10:25 AM
அ நிறம் | அளவு
எழும்பூர்: மூன்றாவது மண்டல அளவிலான கால்பந்து போட்டியில், பச்சையப்பன் அணி முதலிடம் பிடித்தது.
சென்னை மாவட்ட கால்பந்து சங்கம் சார்பில், மூன்றாவது மண்டல அளவிலான கால்பந்து போட்டி, எழும்பூரில் உள்ள நேரு பூங்கா மைதானத்தில், நடந்தது.
அதில், பச்சையப்பன் அணிக்கு முதலிடம் கிடைத்தது. வி.எம்., எப்.சி., அணி இரண்டாம் இடத்தையும், எச்.வி.எப்., அணி மூன்றாம் இடத்தையும் தக்க வைத்து கொண்டன. இந்த மூன்று அணிகளும், இரண்டாவது மண்டல லீக் கால்பந்து போட்டிக்கு முன்னேறின.
